இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த எரங்கவிற்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசத் தடை விதிப்பதாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் வாரிய விதிமுறைகளுக்கு மீறாக 15 பாகை கையை வளைத்து பந்து வீசுவதன் காரணமாக இவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது எரங்கவின் பந்து வீச்சு விதிமுறைக்கு மீறானது என  நடுவர்கள் சர்வதேச கிரிக்கெட் வாரியத்திற்கு  புகார் அளித்தனர்.

இதன்படி அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை நிலையமொன்றில் வைத்து இவரது பந்து வீச்சு பாணி ஆய்விற்குட்படுத்தப்பட்டப் போதே இவர் விதிமுறைகளுக்கு மீறி  பந்த வீசுவது தெரிய வந்துள்ளது.

எனினும் இவர்  பந்து வீச்சு பாணியில் மாற்றம் செய்து சர்வதேச கிரிக்கெட் வாரியத்தில் முறைப்பாடு செய்வாறாயின் இவரது பந்து வீச்சினை மீண்டும் சோதனைக்கு உட்படுத்த முடியும் என சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.