என்னை தனிமைப்படுத்த மாட்டேன் - மருத்துவபரிசோதனைக்கு தயார் - டிரம்ப் தெரிவிப்பு-

14 Mar, 2020 | 12:24 PM
image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  தன்னை கொரோனாவைரஸ் குறித்த மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.

டிரம்ப் தன்னை தனிமைப்படுத்தவேண்டும் என பல மருத்துவர்கள் விடுத்து வரும் அறிவுறுத்தல்களை நிராகரித்துள்ளதுடன்   தனக்கு நோய் அறிகுறிகள் இல்லாததன் காரணமாக தன்னை தனிமைப்படுத்தவேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் அனேகமாக தன்னை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோன வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள பலரை டிரம்பும் அவரது அதிகாரிகளும் சந்தித்துள்ள போதிலும் ஏன் அவர்கள் தங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற கேள்வி  எழுந்துள்ள நிலையிலேயே டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதித்துள்ள பலரை டிரம்ப் சந்தித்துள்ளார். இவற்றில் சில நேரடி சந்திப்புகளாக காணப்படுகின்றன

கடந்த வாரம் டிரம்ப் பிரேசிலின் ஜனாதிபதியையும்  பிரதிநிதிகள் குழுவையும் சந்தித்தார்.

பிரேசில் குழுவில் இடம்பெற்றிருந்த அதிகாரியொருவர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்- ஆ- லாகோவில் இடம்பெற்ற நிகழ்வில் டிரம்புடன் இணைந்து கலந்துகொண்டிருந்த மற்றுமொரு நபரும் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள பலருடன் தொடர்புகொண்டதால் தங்களை தனிமைப்படுத்தியுள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களை டிரம்ப் தொடர்புகொண்டுள்ளார்.

வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் இவன்கா டிரம்ப் உட்பட டிரம்ப் நிர்வாகத்தை சோந்த பலரை சந்தித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் டிரம்ப் தன்னை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும் என மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நோய் அறிகுறி இல்லாவிட்டாலும் டிரம்ப் தன்னை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும் என லீனா வென் எனும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

நோயால் பாதிக்கப்பட்ட நபரிற்கு ஆறடி தூரத்தில் எவர் சென்றாலும் அவர் பாதிக்கப்படுவார்கள் அவர்கள் அதனை பரப்புவார்கள், தாங்கள் பாதிக்கப்பட்டமை தெரியாமலேயே  அவர்கள் இந்த நிலைக்கு ஆளாவார்கள்  என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஒரு சர்வதேச  பொது சுகாதார அவசரநிலையில் உள்ளோம், அனைவரும் விதிமுறைகளை வழிகாட்டுதல்களை பி;ன்பற்றவேண்டும், ஒருவரின் பதவி இ;ந்த விடயத்தில் முக்கியமில்லை என அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52