பிணை முறி மோசடி விவகாரம்: ரவி உள்ளிட்டோரின் ரீட் மனு தொடர்பான தீர்மானம் செவ்வாயன்று

Published By: Vishnu

13 Mar, 2020 | 08:13 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

மத்திய வங்கியில் கடந்த  2016 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி மற்றும் மார்ச்  31 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின் போது நிக்ழ்ந்ததாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சரும், ஐ.தே.க.வின் உப தலைவருமான ரவி கருணாநாயக்க இன்று முதன் முதலாக கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜரானார்.

அவருடன் பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அர்ஜுன் அலோசியஸ், அதன்  முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன உள்ளிட்ட 7 பேர் இன்று கோட்டை நீதிமன்றில் ஆஜராகினர். 

பிணைமுறிகள் மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்களை  இன்று மாலை 4 மணிக்கு முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று முற்பகல் வேளையில் உத்தரவிட்டது. 

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டி.  நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் ஷோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழுவே இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

தம்மை கைது செய்ய கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை, செல்லுபடியற்றதாக அறிவிக்குமாறு கோரி முன்னாள் நிதி அமைச்சரும் ஐ.தே.க.உப தலைவருமான ரவி கருணாநாயக்க உள்ளிட்ட  நால்வர் மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த ரீட் மனு மீதான பரிசீலனைகளின் இடை நடுவே இந்த உத்தரவை  மேன் முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்தது.

இன்றைய தினம் மேன் முறையீட்டு மன்றின் உத்தரவுக்கு அமைய நீதிமன்றத்தில் ஆஜராகும் சந்தேகநபர்களுக்கு எதிராக எவ்வித உத்தரவுகளையும் பிறப்பிக்க வேண்டாம் என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

எனினும் மேன் முறையீட்டு நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய  நீதவான் நீதிமன்றத்தில்  ஆஜராகாத சந்தேக நபர்கள் தொடர்பில், சட்ட மா அதிபர் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் நிலைப்பாட்டிற்கு அமைய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 4 சந்தேக நபர்களால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான பரிசீலனை இன்று மூன்றாவது நாளாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்ப்ட்ட போதே இவ்வாறான ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

குறித்த ரீட் மனு மீது எதிர்வரும் செவ்வாயன்று தீர்மானம் எடுக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

இந் நிலையில் அதுவரை  சந்தேக நபர்கள் தொடர்பில்  எவ்வாறான நிலைப்பாட்டினை முன்னெடுப்பது என்பது தொடர்பில் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மிலிந்த குணிதிலகவின் ஒப்புதலுடன்  மேன் முறையீட்டு நீதிமன்றம்,  இன்று இவ்வாறான உத்தரவை பிறப்பித்திருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47