தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பலர் பிரிவதற்கு சுமந்திரனே காரணம் - மிதுலா விசனம்

Published By: Daya

13 Mar, 2020 | 04:58 PM
image

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன்தான் பண்பில்லாது, ஜனநாயகமில்லாது செயற்படுகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பலர் பிரிவதற்கு இவரே காரணமாக இருக்கின்றார் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொழும்புக்கிளையின் உபதலைவி மிதுலா சிறிபத்மநாதன்தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியில் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்துள்ள நிலையில் அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்படாது கட்சியில் இல்லாத ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவது தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் நாம் வினவியபோது அவர் தெரிவிக்கையில்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் உறுப்பினரான உங்களுக்குப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காகக் கட்சி தலைவர் மற்றும் செயலாளருக்கு விண்ணப்பம் அனுப்பியுள்ள நிலையில் அதனைப் பரிசீலிக்கவில்லை என்பது தொடர்பில் கருத்துக்கள் வெளியாகியுள்ளது இது தொடர்பில் என்ன கூறுகின்றீர்கள்?

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக மட்டுமன்றி கட்சியின் கொழும்புக் கிளையின் உப தலைவராகவும் செயற்பட்டு வருகின்றேன். அந்த வகையில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான எனது விருப்பத்தைத் தெரிவித்து கட்சித் தலைவருடன் கதைத்து எனது விண்ணப்பத்தினை கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் ஆகியோருக்கு அனுப்பியதுடன் அதன் பிரதியைத் தமிழ்த் தோசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயாவிற்கும் ஊடகப் பேச்சாளர் சுமந்திரனுக்கும் அனுப்பிவைத்திருந்தேன். 

அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக அவர்களுடனும் ஏனைய ஆதரவாளர்களுடனும் கலந்துரையாடியிருந்தேன். அவ்வாறான நிலையில் கட்சியின் தெரிவுக்குழு கூடியபொழுது எனது பெயர் சிபாரிசில் இருப்பதாக தெரிவுக்குழு உறுப்பினர்கள் ஊடாகவும், வெளிநாட்டில் உள்ள கிளைகளினூடாகவும் எனக்கு வாழ்த்துக்கள் வந்தவண்ணமிருந்தது. 

நானும் உத்தியோகப்பூர்வமான முடிவு வரும்வரை காத்திருந்தேன். எனினும் என்னுடைய பெயருக்குப் பதிலாக வேறொரு பெண்ணின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன்.

இ.த.அ. கட்சியின் கொழும்புக் கிளையின் உபதலைவராக இருக்கின்ற உங்களுடைய பெயரைப் பரிசீலிக்காமல் கட்சியில் இல்லாத ஒருவரைக் கொண்டுவருவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பது யார்?

இதற்கான முழுக்காரணமும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனையே சாரும். அவர்தான் கட்சியில் இல்லாத ஒருவரை அதுவும் கட்சித் தலைமைக்கு மட்டுமன்றி மக்களுக்கே தெரியாத ஒருவரை பின் கதவால் கொண்டுவந்துள்ளார்.

அவர்தான் கொண்டுவந்துள்ளார் என்று எவ்வாறு தெரியும்?

நான் கட்சித்தலைமையுடன் கலந்துரையாடினேன். அதுமட்டுமன்றி சுமந்திரனையும் அவரது யாழ் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோது அவர் என்னுடன் மரியாதையற்ற வகையில் நடந்துகொண்டார். 

குறிப்பாக நான் கட்சியிடம் எனது விண்ணப்பத்தை அனுப்பியிருந்த போதும் எவ்வாறு வேறு ஒருவரை அதுவும் மக்களுக்குத் தெரியாத ஒருவரை, கட்சியுடன் தொடர்பில்லாத ஒருவரை பின் கதவால் எவ்வாறு நீங்கள் சிபாரிசு செய்ய முடியும் எனக் கேட்டதற்கு உமக்குத்தான் தெரியாது எனக்குத் தெரியும் எனக் கூறியதுடன் நாங்கள் எவரிடமும் விண்ணப்பம் கோரவில்லை, யாரைக் கேட்டு அதை அனுப்பினீர் என வினவியதுடன் கட்சியில் கேள்வி கேட்பவர்களை வைத்திருக்கக் கூடாது விலக்க வேண்டும் எனத் தெரிவித்து என்னை அலட்சியப்படுத்தி வேகமாக வாகனத்திலேறிச் சென்றுவிட்டார்.

உங்களது அடுத்த கட்டச் செயற்பாடு எவ்வாறு இருக்கப்போகின்றது? இது தொடர்பில் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?

நான் மக்களுக்காகவே சேவை செய்கின்றேன். இங்கு எனக்கு நடந்தது பற்றி கேள்வி கேட்பேன். இத்தகைய சம்பவம் நடைபெற்றதற்காகக் கட்சியை விட்டு விலகப்போவதில்லை. இது தனிப்பட்ட ஒருவரது கட்சி இல்லை.

 இது மக்களின் கட்சி. மூத்த தலைவர்களால் உருவாக்கப்பட்ட கட்சி அறிவாற்றல் உள்ளவர்களாலும், பண்பானவர்களாலும் உருவாக்கப்பட்ட கட்சி. அந்தக் கட்சியில் இருக்கின்ற ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் தான் பண்பில்லாது,  ஜனநாயகமில்லாது செயற்படுகின்றார்.

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பலர் பிரிவதற்கு இவரே காரணமாக இருக்கின்றார் என்பதை நான் இப்போதுதான் உணர்ந்து கொண்டேன். தமிழ் மக்களை இறைவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று தந்தை செல்லா தெரிவித்துள்ளார். 

ஆனால் இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், தமிழ் மக்களையும் சுமந்திரனிடமிருந்து இறைவன்தான் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01