ஒவ்வொருவருக்கும் நிம்மதியான தூக்கம் அவசியம் ; இன்று உலக தூக்க தினம் !

Published By: Digital Desk 3

13 Mar, 2020 | 02:44 PM
image

உலக தூக்க தினம் (World Sleep Day) ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.

தூக்கத்தின் அவசியத்தை உணர்த்துவதற்காக தூக்க மருத்துவத்துக்கான உலக அமைப்பு (World association of sleep medicine) 2008 ஆம் ஆண்டு முதல் உலக தூக்க தினத்தை கொண்டாடிவருகிறது.

ஆரோக்கியமான, சிறந்த தூக்கத்தின் பயன்களைக் கொண்டாடுவதும், தூக்கப் பிரச்சினைகள், மற்றும் அதற்கான மருத்துவம், கல்வி, சமூக நோக்கு ஆகியவற்றை சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவதும், தூக்கக் கோளாறுகளின் தடுப்பு மற்றும் அவற்றின் மேலாண்மையை ஊக்குவிப்பதும் இத்தினத்தின் நோக்கமாகும்.

உலக தூக்க தினம் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று இடம்பெறுகிறது.  முதலாவது தூக்க தினம் 2008 மார்ச் 14 ஆம் திகதி அன்று கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வுகளில், தூக்கம் தொடர்புடைய விவாதங்கள், மற்றும் கல்விக் கண்காட்சிகள் ஆகியன இடம்பெறுகின்றன.

இந்த ஆண்டுக்கான வாசகமாக “ சிறந்த தூக்கம்,சிறந்த வாழ்க்கை, சிறந்த கிரகம் “ (Better Sleep, Better Life, Better Planet)  என்ற வாக்கியத்தை வெளியிட்டிருக்கிறார்கள். நவீன வாழ்க்கையின் பழக்க வழக்கங்களால் பெரும்பாலும் சமரசம் செய்யப்படும் ஒரு மனித பாக்கியமாக தூக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல் ” என்பதாகும்.

நிம்மதியாக தூங்க என்ன செய்ய வேண்டும்.

தினமும் குறிப்பிட்ட நேரத்துக்குப் படுக்கச் சென்று,  குறிப்பிட்ட நேரத்துக்கு எழுந்துகொள்வதைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தூங்கச் செல்வதற்குக் குறைந்தது  ஒரு மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டுவிட வேண்டும்.

இரவில் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளையே உண்ண வேண்டும்.

தூங்கச் செல்வதற்கு முன்பு வெதுவெதுப்பான நீரில் குளிப்பது ஆழ்ந்த தூக்கத்தைத் தரும்.

மனதுக்குப் பிடித்த புத்தகங்கள் படிப்பது, மெல்லிய இசை அல்லது பாடல்களைக் கேட்பது போன்றவையும் தூக்கத்தை வரவழைக்கும்.

தூங்குவதற்கு முன்னர், மன அமைதி கிடைக்க, உறவினர்கள் அல்லது  நண்பர்களுடன்  அரட்டை அடிக்கலாம்.

படுக்கைக்குச் செல்லும்போது தளர்வான உடைகளை உடுத்திக்கொள்வது நல்லது.

தூக்கத்துக்குத் தயார்படுத்திக்கொள்ள, மனதை ஒரு நிலைப்படுத்தும் யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற்றைச் செய்யலாம்.

இரவில் பசும்பால் குடிப்பது நல்லது. ஆப்பிள், வாழைப்பழம், மாதுளை போன்ற பழங்களை ஒன்றாகக் கலந்து சாலட் செய்து, ஒரு கப் அளவுக்கு சாப்பிடலாம். இதனால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

செய்யக் கூடாதவை...

தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் உடற்பயிற்சி செய்யக் கூடாது.

தூங்கச் செல்வதற்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்துக்கு முன் தேனீர், கோப்பி, மது என எதையும் குடிக்கக் கூடாது.

இரவுகளில் பயமூட்டும் அல்லது பயங்கரமான படங்களைப் பார்ப்பதைத் தவிருங்கள். ஆர்வத்தைத் தூண்டக்கூடிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது தூக்கத்தைக் கெடுக்கும்.

தூங்குவதற்கு முன் தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம் தொடர்பான புத்தகங்களைப் படிக்க வேண்டாம். ஏனெனில் அவை சிந்தனையைத் தூண்டுவதால் மூளை சுறுசுறுப்பாகி விடும், இதனால் கூட தூக்கம் பாதிக்கும்.

நனைந்த மற்றும் இறுக்கமான உள்ளாடைகளுடன் தூங்கச் செல்லக்க கூடாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29