ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுமா ?

Published By: Daya

13 Mar, 2020 | 10:20 AM
image

அமெ­ரிக்­காவும் ஆப்­கா­னிஸ்­தானில் செயற்­படும் தலிபான் அமைப்பும் அல்­லாஹு அக்பர் என்ற முழக்­கத்­துடன் கட்டார் தலை­நகர் டோகாவில் 2020 Feb- 29 இல் அமைதி ஒப்­பந்தம் கைச்­சாத்­திட்­டன. ஆனால் நான்கு நாட்­க­ளுக்குள் ஆப்­கா­னிஸ்தான் அரச படை­களின் காவ­ல­ரணை தலி­பான்கள் தாக்­கிய போது அமெ­ரிக்க வான் படை­யினர் அவர்கள் மீது குண்­டு­களை வீசினர். அமெ­ரிக்­காவும் தலி­பானும் செய்த உடன்­பாட்டின் படி ஆப்கான் அரசு சிறை­களில் உள்ள 5,000 தலிபான் போரா­ளி­க­ளையும் தலிபான் தன்­னி­ட­முள்ள ஆயிரம் அரச படை­யி­ன­ரையும் விடு­தலை செய்ய வேண்டும். ஆப்கான் அரசு கைதி­களை விடு­தலை செய்ய மறுத்­த­தனால் தாம் தாக்­கினோம் என்­கின்­றனர் தலிபான் அமைப்­பினர். 2020 மார்ச் 3 ஆம் திகதி மட்டும் தலி­பான்கள் 45 இடங்­களில் அரச படை­யினர் மீது தாக்­குதல் செய்­தனர்.

உடன்­பட்ட உடன்­ப­டிக்கை

அமெ­ரிக்­க -­த­லிபான் உடன்­பாட்­டின்­படி 145 நாட்­க­ளுக்குள் ஐயா­யிரம் அமெ­ரிக்கப் படை­யினர் ஆப்­கானில் இருந்து வெளி­யே­ற­வேண்டும். அந்தக் கால­கட்­டத்தில் ஆப்கான் அரசும் தலி­பான்­களும் அமைதிப் பேச்­சு­வார்த்தை செய்ய வேண்டும். ஆப்­கானில் தேர்தல் மூலம் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அரசை தலி­பான்கள் அங்­கீ­க­ரிக்­க­வில்லை. அதை வெளி­யாரின் கைப்­பொம்­மை­யா­கவே பார்க்­கின்­றார்கள். ஆனால், அமெ­ரிக்கா அந்த அர­சையும் அதன் படை­க­ளையும் பாது­காக்கும் பொறுப்பு உடன்­பாடு கையொப்பம் இட்ட பின்பும் உள்­ளது என்­கின்­றது.  ஆப்­கானில் அமை­திக்குப் பங்கம் ஏற்­பட்டால் அமெ­ரிக்கப் படை­யி­னரின் வெளி­யேற்றம் தாம­திக்­கப்­படும் என்­கின்­றது அமெ­ரிக்கா. அமெ­ரிக்­க த­லிபான் உடன்­பாட்­டின்­படி

1. அமெ­ரிக்கா தலை­மை­யி­லான நேட்டோப் படை ஆப்­கா­னி­லி­ருந்து வெளி­யேற்­றப்­படும்,

2. தலி­பான்கள் மீதான ஐக்­கிய நாடுகள் சபையின் தடை நீக்கம் செய்­யப்­பட வேண்டும்

3. அல் –- கொய்தா அமைப்­புக்கு தலிபான் எந்த உத­வியும் செய்யக் கூடாது.

4. ஆப்­கானில் உள்ள அரசும் தலி­பானும் அதி­கா­ரங்­களைப் பகிர்­வ­தற்கு பேச்சுவார்த்தை செய்ய வேண்டும்.

5. ஆப்கான் அரசும் தலி­பான்­களும் தம்­மி­ட­முள்ள கைதி­களை விடு­தலை செய்ய வேண்டும்.

6. அமைதி நட­வ­டிக்­கைகள் சரி­யாக நடந்தால் அமெ­ரிக்கப் படைகள் 2021இன் முற்­ப­கு­தியில் ஆப்­கா­னி­லி­ருந்து முற்­றாக வெளி­யேற வேண்டும்.

ஈராக், லிபியா, சிரியா, யேமன் ஆகிய நாடு­களில் அமெ­ரிக்கா செய்து கொண்­டி­ருந்த போர்கள் முடி­விற்கு கொண்டு வரப்­பட்­டன. அந்த நாடு­களில் அமெ­ரிக்­கா­விற்கு வேண்­டா­த­வர்கள் ஆட்­சியில் இருந்து அகற்­றப்­பட்­டனர்; அமெ­ரிக்கா வெறுக்கும் அமைப்­புக்கள் அடக்­கப்­பட்­டன. இவற்றில் எந்த ஒரு நாட்­டிலும் அமைதி கொண்டு வரப்­ப­ட­வில்லை. ஆப்­கானில் அமெ­ரிக்­கா­விற்கு பிடிக்­காத போராளி அமைப்­புக்­களை அடக்க முடி­ய­வில்லை. ஏதோ ஒரு வகையில் தலி­பா­னுடன் ஒப்­பந்தம் என்ற பெயரில் ஒன்றைச் செய்து அதை தனது சாத­னை­யாகக் காட்டி 2020 நவம்­பரில் நடக்­க­வி­ருக்கும் அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற முயற்­சிக்­கின்றார். 2016இல் இருந்து ஆப்­கா­னி­லி­ருந்து அமெ­ரிக்கப் படைகள் வெளி­யேற வேண்டும் என்ற விருப்பம் அமெ­ரிக்­காவின் குடி­ய­ரசுக் கட்­சி­யி­ன­ரி­டை­யேயும் மக்­க­ளாட்சிக் கட்­சி­யி­ன­ரி­டை­யேயும் அதி­க­ரித்­துள்­ளது. 2016 நடந்த அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்தல் பரப்­பு­ரையின் போது அமெ­ரிக்கப் படை­களின் வெளி­யேற வேண்டும் என்ற கருத்து பர­வ­லாக முன்­வைக்­கப்­பட்­டது. தலி­பா­னுடன் ஒரு உடன்­ப­டிக்கை இல்­லாமல் வெளி­யேற முடி­யாது என்­ப­தையும் பலர் உணர்ந்­தி­ருந்­தனர். சிலர் உடன்­பாடு இல்­லாமல் வெளி­யேற வேண்டும் என வலி­யு­றுத்­தினர்.

தலி­பானின் வர­லாறு

1994 ஆம் ஆண்டு ஆப்­கா­னிஸ்­தானின் கந்­தஹார் நகரில் முல்லா மொஹம்மட் உமர், குரானின் மாண­வர்கள் என்னும் பொருள் கொண்ட தலிபான் அமைப்பை ஆரம்­பித்தார், அதன் கொள்கை இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­த­மாக இருந்­தது. இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் 1979 ஆம் ஆண்டு பெரும் புரட்­சியை ஏற்­ப­டுத்தி அமெ­ரிக்க சார்பு ஆட்­சியை ஈரா­னி­லி­ருந்து அகற்றி இஸ்­லா­மிய மத அடிப்­ப­டையில் மக்­க­ளாட்­சி­யையும் கலந்த ஒரு அரசை ஈரானில் உரு­வாக்­கி­யது. ஆனால் தலிபான் சுனி இஸ்­லா­மிய அமைப்­பாகும். அதன் பெரும்­பான்­மை­யான உறுப்­பி­னர்கள் பஷ்ருன் இனத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாவர். அதன் நோக்கம் குரான் வழிப்­படி இயங்கும் ஓர் அரசை ஆப்­கா­னிஸ்­தானில் உரு­வாக்கி அங்கு அந்­நியத் தலை­யீட்டை ஒழித்துக் கட்­டு­வ­தாகும். சோவியத் ஒன்­றி­யத்­திற்கு எதி­ராக ஆப்­கா­னிஸ்­தானில் அமெ­ரிக்­கா­வி­னதும் பாகிஸ்­தா­னி­னதும் தூண்­டு­தல்­க­ளாலும் உத­வி­யு­டனும் போரா­டிய முஜா­ஹிதீன் அமைப்பின் பல போரா­ளிகள் தலி­பானில் இணைந்து கொண்­டனர்.

தலி­பானின் கொள்­கைகள்

நாட்டில் இஸ்­லா­மிய சட்­டங்கள் கடு­மை­யாகக் கடைப் பிடிக்­கப்­பட வேண்டும், தொலைக்­காட்சி, இசை போன்­றவை தடை செய்­யப்­பட வேண்டும், வேற்று மதங்­க­ளுக்­கான விடு­மு­றைகள் நிறுத்­தப்­பட வேண்டும், பெண்கள் தலையில் இருந்து கால் வரை மூடும் ஆடை­களை அணிய வேண்டும், பெண்கள் பாட­சா­லைக்குப் போகக் கூடாது. அவர்கள் வீட்டில் மட்டும் பணி புரிய வேண்டும், அவர்கள் வெளியில் ஆண் துணை­யின்றிச் செல்லக் கூடாது என்­பன தலி­பானின் கொள்­கை­யாகும். 1997 ஆம் ஆண்டு தலிபான் ஆப்­கா­னிஸ்­தானின் பெயரை இஸ்­லா­மிய அமீ­ரகம் ஆப்­கா­னிஸ்தான் என மாற்­றி­யது. அவர்­க­ளது ஆட்­சியை பாகிஸ்தான், ஐக்­கிய அமீ­ரகம், சவூதி அரே­பியா ஆகிய நாடுகள் அங்­கீ­க­ரித்­தி­ருந்­தன. 1997 ஆம் ஆண்டு முல்லா உமர் சவூதி அரே­பி­ய­ரான ஒசாமா பின் லேட­னுடன் உறவை ஏற்­ப­டுத்த அவ­ரது அல் கொய்தா அமைப்பு ஆப்­கா­னிஸ்­தா­னுக்கு நகர்த்­தப்­பட்­டது. 1996 முதல் 2001 வரை தலி­பானின் ஆட்சி மக்­க­ளுக்கு பல அசௌ­க­ரி­யங்­களை ஏற்­ப­டுத்­தி­யது. 2007 ஆம் ஆண்­ட­ளவில் தமது தவறை உணர்ந்த தலி­பான்கள் மக்­க­ளுடன் இணைந்து செயற்­படத் தொடங்­கினர். பாட­சா­லை­க­ளையும் தொண்டு நிறு­வ­னங்­க­ளையும் தமது இடை­யூறு இல்­லாமல் செயற்­பட அனு­ம­தித்­தனர். தம்மால் நாட்டை ஆள முடியும் என மக்­களை அவர்கள் நம்ப வைக்க முயன்று கொண்­டி­ருக்­கின்­றனர்.

எல்லா இனக்­கு­ழு­மங்­க­ளுக்கும்

 ஒரே பிர­தி­நி­தி­யா ?

பல இனக்­கு­ழு­மங்­களைக் கொண்ட ஆப்­கானில் தலி­பா­னுக்­கான ஆத­ரவுத் தளம் பஷ்ருன் இன மக்­க­ளி­டை­யைதான் காணப்­ப­டு­கின்­றது. தலிபான் அமைப்பின் உயர் மட்­டத்­தி­னரில் ஐம்­பது வீதத்­தினர் கந்­தஹார் மாகா­ணத்தில் வாழும் பஷ்ருன் இனத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாவர். ஹஜாரா, தஜிக், உஷ்பெக் ஆகிய இனக்­கு­ழு­மங்­களைச் சேர்ந்­த­வர்கள் தலி­பானை வெறுக்­கின்­றார்கள். தலி­பான்கள் தாமே முழு ஆப்­கா­னையும் பிர­தி­நி­தித்­துவம் செய்­வ­தாக அடம் பிடிக்­கின்­றனர். அவர்கள் தமது இஸ்­லா­மிய மதச் சட்­டங்­களின் படி ஆட்சி நடத்தும் கொள்­கையில் எவ்­வ­ளவு தளர்வு காட்­டு­வார்கள் என்­பதில் தான் ஆப்­கானில் அமைதி திரும்­புமா என்ற கேள்­விக்­கான பதில் இருக்­கின்­றது.

பாகிஸ்தான் எப்­படிப் பார்க்கும் ?

தலி­பான்கள் மீதான 60,000 வான் தாக்­கு­தல்­களை அமெ­ரிக்கப் படை­யினர் பாகிஸ்­தானில் இருந்தே மேற்­கொண்­டனர். தலி­பான்­க­ளு­ட­னான போருக்கு அமெ­ரிக்­கா­வுக்கு பாகிஸ்­தானின் உதவி மிக அவ­சி­ய­மா­ன­தாக இருக்­கின்­றது. ஆப்­கா­னிஸ்­தானில் இருந்து அமெ­ரிக்கப் படை­யினர் வெளி­யே­றிய பின்னர் அமெ­ரிக்­காவின் செல்லப் பிள்ளை என்ற நிலையை பாகிஸ்தான் இழக்க நேரி­டலாம். பாகிஸ்தான் உரு­வாக்­கிய இஸ்­லா­மிய தீவி­ர­வாத அமைப்­புக்கள் பல ஆப்­கானில் செயற்­ப­டு­கின்­றன. அதில் ஹக்­கானி அமைப்பு முக்­கி­ய­மா­னது. அது இந்­தி­யா­வுக்கு எதி­ராக கடும் நிலைப்­பாட்­டுடன் இருக்கும் அமைப்­பாகும். பாகிஸ்தான் ஆத­ரவு அமைப்­புக்கள் பாகிஸ்­தா­னிற்குள் நுழைந்தால் அது பாகிஸ்­தானின் உறு­திப்­பாட்டில் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்தும். அமெ­ரிக்­காவின் ஆப்கான் அமைதி முயற்­சியை பாகிஸ்தான் குழப்ப முயன்றால் பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக ட்ரம்ப் பொரு­ளா­தாரத் தடையைக் கொண்டு வரலாம். ஏற்­க­னவே மோச­ம­டைந்­துள்ள பாகிஸ்­தானின் பொரு­ளா­தாரம் அதனால் பெரிதும் பாதிக்­கப்­படும்.

அமெரிக்கப் படையினர் திட்டமிட்டபடி ஆப்கானில் இருந்து வெளியேறிய பின்னர் அங்கு ஒரு உறுதியான ஆட்சி அமையாவிட்டால் ரஷ்யா, ஈரான், துருக்கி, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தானை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயற்சிக்கலாம். அதற்குதூண்டுகோலாக ஆப்கானிஸ்தானில் பெருமளவு கனிம வளங்கள் இருக்கின்றன. அவற்றின் பெறுமதி ஒன்று முதல் மூன்று ரில்லியன் டொலர்கள் பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கனிம வளங்களை மேற்கு நாட்டு கூட்டாண்மை நிறுவனங்கள் போராளிக் குழுக்களிடமிருந்து மிகக் குறைந்த விலை கொடுத்து வாங்கி பெரும் இலாபம் ஈட்டிக் கொண்டிருந்தன. 2020 நவம்பர் தேர்தலின் பின் அமெரிக்கா மீண்டும் ஆப்கானில் வேறு விதமாக வரலாம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13