இத்தாலிய ரோம் நகரானது அந்தப் பிராந்தியத்துக்கான முதலாவது பெண் மேயரை தெரிவு செய்யத் தயாராகி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

ஐந்து நட்சத்திர இயக்கத்தைச் சேர்ந்த வேர்ஜினியா ரக்கி என்ற மேற்படி பெண் வேட்பாளரது வெற்றியானது அந்நாட்டுப் பிரதமர் மற்றியோ ரென்ஸிக்கு பாரிய அடியாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

சட்டத்தரணியான ரக்கி( 37 வயது) இரு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற முதல் சுற்று வாக்கெடுப்பில் 35 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரது போட்டி வேட்பாளரான ரொபேர்ட்டோ ஜியசெற்றி அந்த வாக்கெடுப்பில் 24 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.ரோம் நகரிலான வெற்றி பூகோளமயமாக்கத்திற்கு எதிரான ஐந்து நட்சத்திர இயக்கத்திற்கு 2018 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் களமொன்றை அமைத்துத் தருவதாக உள்ளதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.