சிறுநீரக கற்கள் மீண்டும் மீண்டும் வருவது ஏன்?

Published By: Digital Desk 4

12 Mar, 2020 | 07:00 PM
image

சிலருக்கு சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதுண்டு. அதனை சத்திர சிகிச்சையின் மூலமாக அகற்றிய பின்பு, சிறிது காலம் சென்று மீண்டும் அவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் பிரச்சினை ஏற்படுவதுண்டு. முதலில் இதற்கான காரணத்தை நாம் அறிந்து கொள்வோம்.

“ சிறுநீரகக் கற்கள் உண்டாகி, அதனை சிகிச்சையின் மூலம் அகற்றிய பிறகு, மீண்டும் கற்கள் உருவாகுவதற்கு எம்முடைய உடலில் உள்ள தாது உப்புக்களை ஜீரணிக்கும் தன்மை குறைவதுதான் காரணம். சிலருக்கு இத்தகைய செரிமானத்தின் இயல்புத்தன்மை மாறுபடலாம். நாம் சாப்பிடும் உணவின் மூலமாக தாது உப்புக்கள் செரிக்கப்பட்டு, ரத்தத்துடன் கலக்கிறது. கல்லீரலில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட தாதுஉப்புக்கள், அந்தந்த உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

இந்த தாது உப்புக்கள் சிறுநீரில் வெளியேறும் பொழுது ஏற்படும் ‘வேதியல் மாற்றங்களால் தான் ’ சிறுசிறு கற்கள் உருவாகிறது. இந்த வேதியல் மாற்றங்களை ‘சிட்ரெட்’ எனப்படும் ஒருவகையான தாது உப்பு தடுக்கிறது. இதன் குறைபாட்டினால் கூட கற்கள் ஏற்படலாம்.

ஒரு முறை சிறுநீரகக் கற்கள் ஏற்பட்டு, அதற்குரிய சிகிச்சை செய்து அகற்றிய பின்னர், மருத்துவர்கள் கூறும் பரிந்துரையை குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகாலம் கடைபிடிக்க வேண்டும். அதன் பிறகு அத்தகைய பாதிப்பு மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பு குறைவு.

சிலருக்கு சிறுநீரக பாதையில் ஏற்படும் புண்களாலும் கற்கள் உருவாகலாம். வேறு சிலருக்கு சிறுநீரகப் பாதையில் சிறுநீர் குறிப்பிட்ட கால அவகாசத்தை கடந்து தேக்கமடைந்திருந்தாலும் கூட, அதன் காரணமாகவும் கற்கள் உருவாகும். இதன் காரணமாகத்தான் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டால், அதனை அடக்காமல் வெளியேற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36
news-image

அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் ரத்த நாளத் தடிப்பு...

2024-04-03 16:12:32
news-image

ட்ரைஜெமீனல் நியுரால்ஜியா எனும் முக நரம்புகளில்...

2024-04-05 09:27:49