மூடப்பட்ட மைதானங்களிற்குள் ஐபிஎல்- ஆராய்கின்றது இந்திய கிரிக்கெட்

12 Mar, 2020 | 03:43 PM
image

கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகளை மூடிய மைதானத்திற்குள் நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை ஆராய்ந்து வருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் அதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளை மூடிய மைதானத்தி;ற்குள் நடத்துவது குறித்து சிந்தித்து வருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ள கடும் நடவடிக்கைகள் காரணமாக ஐபிஎல் தொடரில் ஏப்பிரல் 15 ம் திகதி வரை வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதற்கான வாய்ப்பு இல்லாத நிலை ஏற்படலாம் என இந்திய கிரிக்கெட் கட்டு;ப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

ஐபிஎல்லில் விளையாடும் வீரர்கள் வர்த்தக விசா பிரிவிற்குள் அடங்குகின்றனர் என தெரிவித்துள்ள பிசிசிஐ அதிகாரியொருவர் மத்திய அரசாங்கத்தின் உத்தரவின் காரணமாக வெளிநாட்டு வீரர்கள்  இந்தியா வரமுடியாத நிலையேற்படலாம் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவின் சுகாதார அமைச்சு  தேசிய விளையாட்டு அமைப்புகள் அனைத்தையும் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டு;ள்ளது.

கொரோனா வைரசினை கருத்தில் கொண்டு பெருமளவு இரசிகர்கள் கூடுவதற்கான சந்தர்ப்பங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு  இந்தியாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோன வைரஸ் அச்சம் காரணமாக இம்முறை ஐபிஎல் போட்டிகள்; பிற்போடப்படலாம் அல்லது ரசிகர்கள் தொலைக்காட்சிகளில் மாத்திரம் பார்ப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படலாம் என மகராஸ்டிரா அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மகராஸ்டிராவின் சுகாதார அமைச்சர் ராஜேஸ் தோபே இதனை தெரிவித்துள்ளார்.

மும்பாயில் இருவர் கொரோனாவைரசினால்  பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மாநில அரசாங்கம் போட்டிகளை இரத்துசெய்யலாம் அல்லது தொலைக்காட்சிகளில் மாத்திரம் ரசிகர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பை வழங்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்போட்டிகளை ரசிகர்கள் பார்ப்பதற்கான டிக்கெட்களை விற்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாநில அமைச்சரவை இது குறித்து ஆராய்ந்துள்ளது நாங்கள் இரு விதமான முடிவுகளிற்கு வந்துள்ளோம், ஒன்று போட்டிகளை ஒத்திவைப்பது அல்லது மைதானத்தில் பார்ப்பதற்கு கட்டணம் அறவிடாமல் போட்டிகளை நடத்துவது என்பதே அந்த இரண்டு முடிவுகள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மைதானத்திற்கு பெருமளவானவர்கள் போட்டிகளை பார்ப்பதை வருவதை தடுப்பதற்காக போட்டிகளை தொலைக்காட்சியில் ஓளிபரப்பு செய்வோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35