(ஆர்.யசி)

இராணுவத்தின் மீது படிந்துள்ள கரைகளை அகற்றவும், வடக்கில் இன அழிப்பு ஒன்று நடைபெறவில்லை என்பதை நிரூபிக்கவும் இப்போது  காலம் வந்துள்ளது. இந்த விவகாரத்தில் காலம் தாமதிப்பது பொய்களை உண்மையாக்கிவிடும் என முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பென்சேகா தெரிவித்தார். 

யுத்த குற்ற விசாரணைகளை தாமதப்படுத்துவது நாட்டுக்கு மேலும் அழுத்தமாகவே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை தொடர்பிலான விவாதம் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது.

 இநிலையில் இலங்கையின் செயற்பாடுகள் எவ்வாறானதாக அமையவேண்டும் என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.