ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்கு செல்ல தடை ; கொரோனாவால் 43 மாநிலங்கள் பாதிப்பு!

Published By: Vishnu

12 Mar, 2020 | 11:29 AM
image

அமெரிக்காவில் தற்போது 25 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதுடன், 696 பேர் அதனால் பாதிப்படைந்துள்ளனர்.

இந் நிலையில் கொரோனா பரவலை தடுக்க தற்போது அமெரிக்க பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகின்றது:

ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருவோருக்கு தடை: 

இன்று நள்ளிரவு முதல் அடுத்த 30 நாட்களுக்கு 26 ஐரோப்பிய நாடுகளிலிருந்து பயணிகள் அமெரிக்கா வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை அறிவித்தார்.

பாதிக்கப்பட்டுள்ள 43 மாநிலங்கள்:

வடக்கு டகோட்டா மாநிலத்தில் ஒருவர் கொரோான தொற்றுக்குள்ளாளகியுள்ளதாக அதிகாரிகள் இன்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் 43 மாநிலங்களில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டொம் ஹாங்க்ஸ் பாதிக்கப்பட்டார்:

இரண்டு முறை அகாடமி விருது பெற்ற நடிகர் டொம் ஹாங்க்ஸுற்கும் அவரது மனைவி நடிகை ரீட்டா வில்சனுக்கும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இவர்கள் இருவரும் அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்து அமெரிக்கவுக்கு திரும்பியபோது கொரோனா தொடர்பான பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

போட்டிகளை இடை நிறுத்திய அமெரிக்க கூடைப்பந்து சம்மேளனம்:

கூடைப் பந்து போட்டிகளில் கலந்து கொள்ளும் 'Utah Jazz' என்ற அணி வீரர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில‍ை அமெரிக்க கூடைப்பந்து சம்மேளனம் போட்டிகளை இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

அத்துடன் மேலும் பல கூடைப் பந்து விளையாட்டுப் போட்டிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பார்வையாளர்கள் இல்லாமல் இடம்பெறுகின்றது.

மேலும் பல மாநிலங்களுக்கு அவசர காலநிலை:

கொரோனா வைரஸ் அமெரிக்கா முழுவதும் தொடர்ந்து பரவி வருவதால் 23 மாநிலங்களில் முன்னதாகவே அவசரகால நிலை அறிவிக்கப்பட்ட நிலையில் அரிசோனா, நியூ மெக்ஸிகோ, லூசியானா, ஆர்கன்சாஸ் மற்றும் வாஷிங்டன் போன்ற இடங்களிலும் புதன்கிழமை அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17