இத்தாலியில் கொரோனாவினால் இறப்போர் விகிதம் அதிகமாகின்றமைக்கான காரணம் வெளியானது..!

12 Mar, 2020 | 12:40 PM
image

சீனாவில் தொடங்கி 118 நாடுகள் வரை தொற்றுக்குள்ளாகியள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவுக்கு வெளியே மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாகவும், இறப்பு எண்ணிக்கை அதிகமாக பதியப்பட்ட நாடாகவும் இத்தாலி காணப்படுகின்றது.

சீனாவில் கொரோனா வைரஸ் காரணமான பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 80,000ஐ எட்டிய போதும் இறப்பின் சதவீதம் 3.91 ஆக காணப்பட்டது. எனினும் இத்தாலியில் இதுவரை 10,149 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 631 பேர் வரை மரணமடைந்துள்ளனர்.  அதன் அடிப்படையில் இத்தாலியின் இறப்பு சதவீதம்  6.22 ஆக காணப்படுகின்றது.

இந்நிலைமைக்கு இத்தாலியின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் 65 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளமையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இத்தாலி உலகிலேயே அதிக வயதான மக்களை கொண்ட நாடு என்பது குறிப்பிடத்தக்கது. 

இத்தாலியின் நோய் தாக்கம் ஏற்பட்ட பகுதியில் மக்கள் செரிவு அதிகமாக காணப்படுகின்றமை மற்றொரு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் இறந்தவர்களில் 14 சதவீதமானோர் 80-85 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் 12 சதவீதமானோர் 70-79 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் மேல் உள்ள  சீன புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கமைய கொரோனா வைரஸ் வயோதிபர்களிடையே அதிக தாக்கம் செலுத்துகின்றது. அதாவது அவர்களின் நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளமையால் வயதானவர்கள் கொரோனா வைரஸூக்கு எதிராக போராட முடியாமல் இறப்பு நேர்கின்றது. 

கொரோனா வைரஸ், வைத்தியர்கள் மற்றும் நோயாளர்களிடையே குறுக்கு தொற்றுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், நோய் தொற்றை ஆரம்பக்கட்டத்தில் சமாளிப்பது கடினமான காரியமாக உள்ள நிலையில் வைத்திய துறையில் மாற்றங்களை செய்யவேண்டிய கட்டாயத்தில்  வைரஸ் தாக்கம் இணங்காணப்பட்ட நாடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35