இன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - மார்ச் 12

Published By: Digital Desk 3

12 Mar, 2020 | 08:53 AM
image

இன்றைய நாள் நிகழ்வுகள்:

1622 – இயேசு சபை நிறுவனர்கள் லொயோலா இஞ்ஞாசி, பிரான்சிஸ் சவேரியர் ஆகியோருக்கு கத்தோலிக்க திருச்சபை புனிதர்களாக அறிவித்தது.

1879 – நூற்றுக்கும் அதிகமான ஆங்கிலப் படைகள் சூலுக்களினால் சுற்றிவளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

1894 – முதற் தடவையாக கொக்கா-கோலா மென்பானம் கண்ணாடிப் புட்டியில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.

1913 – அவஸ்திரேலியாரேலியாவின் தலைநகர் அதிகாரபூர்வமாக கன்பரா எனப் பெயரிடப்பட்டது. கன்பரா அமைக்கப்படும் வரையில் 1927 வரையில் மெல்பேர்ன் தற்காலிகத் தலைநகராக இருந்தது.

1918 – 215 ஆண்டுகளாக ரஸ்சியாவின் தலைநகராக இருந்த சென் பீட்டர்ஸ்பேர்க் தலைநகர் அந்தஸ்து மாற்றப்பட்டு மாஸ்கோ தலைநகராக்கப்பட்டது.

1922 – ஆர்மீனியா, சியார்சியா, அசர்பைஜான் ஆகிய நாடுகள் திரான்சுகாக்கேசிய சோசலிச சோவியத் குடியரசு என்ற பெயரில் இணைந்தன.

1928 – கலிபோர்னியாவில் சென் பிரான்சிஸ் அணைக்கட்டு உடைந்ததில் 431 பேர் உயிரிழந்தனர்.

1930 – மகாத்மா காந்தி பிரித்தானிய ஆட்சியாளரின் உப்பு ஆதிக்கத்துக்கு எதிராக 200 மைல் நீள தண்டி யாத்திரையை ஆரம்பித்தார்.

1934 – எசுத்தோனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டன.

1938 – ஜேர்மனியப் படைகள் ஆஸ்திரியாவை ஆக்கிரமித்தன. அடுத்த நாள் இணைப்பு அறிவிக்கப்பட்டது.

1940 – பனிக்காலப் போர்: பின்லாந்து மாஸ்கோவுடன் அமைதி உடன்பாட்டிற்கு வந்தது. கரேலியாப் பகுதி முழுவதும் சோவியத் ஒன்றியம் பெற்றுக் கொண்டது. பின்லாந்துப் படைகளும் மீதமிருந்த மக்களும் உடனடியாக வெளியேறினர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: பசிபிக் போர்: சாவகத்தில் இடம்பெற்ற சமரில் அமெரிக்க-பிரித்தானிய-அவுஸ்திரேலிய கூட்டுப் படை பண்டுங் என்ற இடத்தில் ஜப்பானிடம் சரணடைந்தது.

1943 – கிரேக்கம் மீதான இத்தாலிய ஆக்கிரமிப்பு: இத்தாலியப் படைகள் கார்திசுத்தா நகரைக் கைவிட்டு வெளியேறின. இதே நாளில், இத்தாலியப் படைகள் சரித்சானி நகரை சூறையாடி, 360 வீடுகளை எரித்தனர், 40 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

1950 – வேல்சில் வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 80 பேர் உயிரிழந்தனர்.

1954 – சாகித்ய அகாதெமி இந்திய அரசினால் தொடங்கப்பட்டது.

1967 – ஜகர்த்தோ இந்தோனேசியாவின் அரசுத்தலைவரானார்.

1968 – மொரிசியஸ் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது

1992 – மொரிசியஸ் பொதுநலவாய அமைப்பினுள் குடியரசானது.

1993 – அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகவிருப்பதாக வட கொரியா அறிவித்தது.

1993 – மும்பையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 300 பேர் கொல்லப்பட்டனர்.

1999 – முன்னாள் வார்சா ஒப்பந்த நாடுகள் செக் குடியரசு, அங்கேரி, போலந்து ஆகியன நேட்டோவில் இணைந்தன.

2003 – சேர்பியாவின் பிரதமர் சொரான் தின்திச் பெல்கிறேட் நகரில் கொல்லப்பட்டார்.

2003 – சார்ஸ் தொற்றுநோய் குறித்த உலகளாவிய எச்சரிக்கையை உலக சுகாதார அமைப்பு அதிகாரபூர்வமாக விடுத்தது.

2006 – தென்னாபிரிக்கா ஒரு நாள் பன்னாட்டுத் துடுப்பாட்டமொன்றில் 438/9 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலியாவை (434) வென்று சாதனை படைத்தது.

2007 – கலிபோர்னியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயினால் 2000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலப்பரப்பு எரிந்து நாசமடைந்தன.

2011 – ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து புக்குசிமா டா இச்சி அணு உலை வெடித்தது.

2014 – நியூயோர்க்கில் ஏற்பட்ட வாயு வெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர், 70 பேர் காயமடைந்தனர்.

இன்றைய நாள் பிறப்புகள்:

1685 – ஜியார்ஜ் பெர்க்லி, ஐரிய ஆயர், மெய்யியலாளர் (இ. 1753)

1824 – குஸ்த்தாவ் கிர்க்காஃப், உருசிய-ஜேர்மனிய இயற்பியலாளர் (இ. 1887)

1835 – சைமன் நியூகோம்பு, கனடிய-அமெரிக்க வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1909)

1863 – விளாதிமிர் வெர்னாத்ஸ்கி, உருசிய கனிமவியலாளர், வேதியியலாளர் (இ. 1945)

1889 – லிபியாவின் இத்ரிஸ் (இ. 1983)

1907 – மா. இராசமாணிக்கனார், தமிழகத் தமிழறிஞர், வரலாற்றாளர் (இ. 1967)

1907 – தோரித் கோப்லீட், அமெரிக்க வானியலாளர் (இ. 2007)

1913 – ஒய். பி. சவாண், இந்திய அரசியல்வாதி (இ. 1984)

1922 – அப்துல் ரசாக் உசேன், மலேசியாவின் இரண்டாவது பிரதமர் (இ. 1976)

1928 – எட்வர்ட் ஆல்பீ, அமெரிக்க நாடக ஆசிரியர் (இ. 2016)

1945 – விஜய் குமார் பட்டோடி, இந்தியக் கணிதவியலாளர் (இ. 1976)

1947 – மிட் ராம்னி, அமெரிக்கத் தொழிலதிபர், அரசியல்வாதி

1949 – ரோப் கோஹன், அமெரிக்க இயக்குநர்

1953 – மாதவ் குமார் நேபாள், நேபாள அரசியல்வாதி, பிரதமர்

1956 – ஜோஸ்ட் கிப்பர்ட், செருமானிய மொழியியலாளர்

1968 – ஏரன் ஏக்கார்ட்டு, அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்

1983 – அதிஃப் அஸ்லம், பாக்கித்தானியப் பாடகர், நடிகர்

1984 – சிரேயா கோசல், இந்தியப் பாடகி

1994 – கிறிஸ்டினா கிரிம்மி, அமெரிக்கப் பாடகி (இ. 2016)

இன்றைய நாள் இறப்புகள்:

417 – முதலாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)

604 – முதலாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 540)

1853 – மத்தாயூ ஆர்ஃபிலா, எசுப்பானிய-பிரான்சிய நச்சியலாளர், வேதியியலாளர் (பி. 1787)

1914 – ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ், அமெரிக்கப் பொறியாளர், தொழிலதிபர் (பி. 1846)

1925 – சன் யாட் சென், சீனக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (பி. 1866)

1942 – வில்லியம் ஹென்றி பிராக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1862)

1960 – க்ஷிதி மோகன் சென், இந்திய வரலாற்றாளர், எழுத்தாளர் (பி. 1880)

1972 – வசீலி பெசென்கோவ், சோவியத், உருசிய வானியற்பியலாளர் (பி. 1889)

1999 – எகுடி மெனுகின், அமெரிக்க-சுவிட்சர்லாந்து வயலின் இசைக் கலைஞர் (பி. 1916)

2006 – சுந்தரிபாய், தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1923)

2009 – ஓமக்குச்சி நரசிம்மன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1936)

2015 – டெர்ரி பிராச்செத், ஆங்கிலேய ஊடகவியலாளர், நூலாசிரியர் (பி. 1948)

2016 – இலாயிடு சேப்ளி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1923)

இன்றைய சிறப்பு நாள்:

மின்வெளித் தணிக்கைக்கு எதிரான உலக நாள் (எல்லைகளற்ற செய்தியாளர்கள், பன்னாட்டு மன்னிப்பு அவை ஆகியவற்றால் 2009 இல் கோரப்பட்டது)

மர நாள் (சீனா, தைவான், மாக்கடோனியக் குடியரசு)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55