செயற்கையாக சோளம் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கான முயற்சி குறித்து உடனடி விசாரணை

Published By: Digital Desk 4

11 Mar, 2020 | 08:33 PM
image

போதுமானளவு சோளம் கையிருப்பில் உள்ள நிலையில் செயற்கையாக சோளம் தட்டுப்பாட்டை உருவாக்குவதற்கான முயற்சி குறித்து உடனடி விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர நுகர்வோர் சேவைகள் அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

சோளம் விற்பனையின் மூலம் நியாயமற்ற முறையில் இலாபமீட்டும் இடைத்தரகர்கள் இந்த முயற்சியின் பின்னால் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அவர்களது நோக்கம் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி எதிர்வரும் பண்டிகை காலத்தில் கோழி இறைச்சியின் விலையை அதிகரிக்க செய்வதாகும் என தகவல் கிடைத்துள்ளது.

விவசாயிகளையும் நுகர்வோரையும் பாதுகாப்பதற்காக இந்த மோசடி நடவடிக்கையை தோல்வியுறச் செய்ய வேண்டுமென ஜனாதிபதியின் செயலாளரின் தலைமையில் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டது. 

சோளப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் விவசாயத்துறை அமைச்சு மற்றும் நுகர்வோர் சேவைகள் அதிகார சபை அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

இம்முறை 70,000 ஏக்கரில் சோளம் பயிரிடப்பட்டது. இதன் மூலம் கிடைக்கப்பெற்ற அறுவடை மூன்று இலட்சம் மெற்றிக் தொன்களாகும். அவை சந்தைக்கு வரவில்லை. ஒரு கிலோ சோளத்திற்கு விவசாயிகளுக்கு செலுத்தப்பட வேண்டிய ஆகக் குறைந்த விலை 50 ரூபாவாகும்.

அதிகபட்ச விற்பனை விலை கிலோ ஒன்றுக்கு ரூபா 55 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.சோளம் பயிர்ச் செய்கையை அபிவிருத்தி செய்து விவசாயிகளையும் நுகர்வோரையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றை தயாரித்துள்ளது. சோளம் இறக்குமதி அண்மையில் நிறுத்தப்பட்டிருந்தது. விவசாய அமைச்சு இனங்கண்டுள்ள அனைத்து காணிகளிலும் சோளப் பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

வருடாந்த சோள உற்பத்தியை 8 மெற்றிக் தொன்களாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகின்றது. பாரியளவில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அரச வங்கிகளின் மூலம் கடன் வசதிகளும் வழங்கப்படும்.

எதிர்வரும் பண்டிகை காலத்தில் கோழி இறைச்சியின் அதிகபட்ச விலை கிலோ ஒன்றிற்கு ரூபா 4.30 ஆக வைத்திருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விலங்கு உணவு உற்பத்தி உட்பட வருடாந்த சோள தேவை 4,50,000 மெற்றிக் தொன்களாகும். 2018ஆம் ஆண்டு 133,128 மெற்றிக் தொன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக 6,718 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் வரை 87,109 மெற்றிக் தொன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், அதற்காக 4,846 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11