வவுனியாவில் சிறுமி மீது பாலியல் வல்லுறவு -  பாடசாலையொன்றின் அதிபர் மீது சந்தேகம்

Published By: Digital Desk 4

11 Mar, 2020 | 04:41 PM
image

வவுனியா பாவக்குளம் படிவம் 2 இல் சிறுமியொருவரை பாடசாலையொன்றின் அதிபர் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியது தொடர்பாக செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது,

செட்டிகுளம் படிவம் 2 வசிப்பவரும் காக்கையன்குளத்தில் பாடசாலையொன்றில் அதிபராக கடமையாற்றும் நபரொருவர் அதே கிராமத்தில் வசிக்கும் தாய் தந்தையை பிரிந்து வாழும் 16 வயதுடைய சிறுமியை தனது வீட்டில் தங்க வைத்துள்ளார். 

இந்நிலையில் சிறுமி மீது அதிபரினால் பாலியல் ரீதியான துன்புறுத்தல் மேற்கொள்ளப்படுவதாக அயலவர்களினால் செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான அதிகாரிகள் குழு குறித்த கிராமத்திற்கு சென்று சிறுமியுடன் கலந்துரையாடிதன் அடிப்படையில் சிறுமி 15 வயதில் இருந்து உடல் ரீதியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் குழு செட்டிகுளம் பொலிஸாரின் உதவியுடன் பொலிஸ் நிலையத்தில் சிறுமியை ஒப்படைத்துள்ளனர்.

இதன் பிரகாரம் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் தமது தரப்பு வாக்குமூலத்தினை பொலிஸாருக்கு வழங்கியதையடுத்து சிறுமியிடம் செட்டிகுளம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இவற்றின் அடிப்படையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரான அதிபரை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01