மைத்திரிபால சிறிசேனவுக்கு தேர்தலில் போட்டியிட அரசியலமைப்பில் எந்த தடையும் இல்லை : வீரகுமார

Published By: R. Kalaichelvan

11 Mar, 2020 | 04:34 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தேர்தலில் போட்டியிட அரசியலமைப்பில் எந்த தடையும் இல்லை. அதனால் அவர் நிச்சயமாக போட்டியிடுவார். போட்டியிடக்கூடாது என எந்த கோரிக்கையும் வரவில்லை.

அவ்வாறு தெரிவிப்பதற்கு யாருக்கும் உரிமையும் இல்லை என சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப்பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

சிறிலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடக்கூடாது என தெரிவிக்கப்படும் பிரசாரத்தில் எந்த உண்மையும் இல்லை. அவ்வாறான எந்த கோரிக்கையும் எமக்கு வரவில்லை. மைத்திரிபால சிறிசேனவுக்கு தேர்தலில் போட்டியிட அரசியலமைப்பில் எந்த தடையும் இல்லை. அவ்வாறு இருக்கையில் அவர் போட்டியிடக்கூடாது என தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை.

மேலும் நாட்டின் ஏனைய பிரஜைகளுக்குபோன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தேர்தலில் போட்டியிடும் உரிமை இருக்கின்றது.

பொலன்னறுவை மக்களின் ஆதரவு அவருக்கு இருக்கின்றது. அதனால் நிச்சயமாக அவர் போட்டியிடுவார். அத்துடன் மைத்திரிபால சிறிசேன தேதேர்தலில் போட்டியிடாமல் அவரை தேசியப் பட்டியலில் தெரிவு செய்யப்படவேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொய் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அவ்வாறான எந்த செய்தியும் எங்களுக்கு வரவில்லை. அதனை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம்

அத்துடன் எமக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி ஒற்றுமையை இல்லாமலாக்க நினைப்பவர்களே இவ்வாறான பொய் பிரசாரங்களை மேற்கொண்டுவருகின்றனர்.

நாங்கள் ஒற்றுமையாக இணைந்து செயற்பட்டால்தான் தேர்தலில் நாங்கள் எதிர்பார்க்கும் வெற்றியை அடைந்துகொள்ள முடியும். இல்லாவிட்டால் ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல்போகும் நிலை ஏற்படலாம் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19