பொதுதேர்தலில்  பொதுஜன  பெரமுனவிற்கு இணையான கட்சிகள் ஏதும் கிடையாது - ரோஹித அபேகுணவர்தன

Published By: Digital Desk 4

11 Mar, 2020 | 04:08 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு  ஸ்ரீ லங்கா  பொதுஜன பெரமுனுவினர் தயாராகவே உள்ளோம்.  தேர்தலில் போட்டியிடுவதற்கு பலமான எதிர்க்கட்சி ஒன்று  இம்முறை  கிடையாது.    

சஜித் மற்றும்  ரணில் அணியினருக்கு இடையிலான முரண்பாடுகள்  பொதுஜன பெரமுனவின்  வெற்றிக்கு  பாரிய வலு சேர்க்கும் என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

இத்தாலி மற்றும் தென் கொரியா ஆகிய  நாடுகளில் இருந்து  வருகை  தரும் இலங்கையர்கள்   அரசாங்கத்தின்  செயற்பாடுகளுக்கு   முழுமையான  ஒத்துழைப்பினை  வழங்குவதுடன்,  பொறுப்புடன்   செயற்பட வேண்டும். நாட்டுக்குள் கொரோனா  வைரஸ்   தொற்று   பரவலடைந்தால்  பாரிய  விளைவுகள் ஏற்படும். எனவும் தெரிவித்தார்.

பொதுஜன  பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று புதன்கிழமை இடம்  பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேர்தலில் போட்டியிடுவதற்கு  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு இணையாக சவால் விடுக்கும்  கட்சி ஒன்று  கிடையாது.    ஐக்கிய தேசிய கட்சி எந்நிலையில் எவரை  பிரதமர் வேட்பாளராக களமிறக்கி தேர்தலில் போட்டியிடும் என்பது இன்றும் கேள்விக்குறியாகவே  காணப்படுகின்றது.    

முன்னாள் எதிர்க்கட்சி  தலைவர் சஜித் பிரேமதாஸ  தலைமையிலான   ஐக்கிய மக்கள் சக்தி இன்னும்    இழுபறி நிலையிலேயே  காணப்படுகின்றது. ஆகவே    தற்போது   ரணில்  அணியினருக்கும்,  சஜித் அணியினருக்கும் இடையில்  மாத்திரமே  போட்டி  காணப்படுகின்றது.

அத்தோடு கொரோனா தொற்று நோய்  தாக்கத்தினால்   தென்கொரியா மற்றும் இத்தாலி   ஆகிய  நாடுகளில் இருந்து   இலங்கைக்கு  வந்துள்ள இலங்கை பிரஜைகள் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு  முழுமையான  ஒத்துழைப்பு   வழங்க வேண்டும். 

நோய்   தொற்று  வருவதற்கு முன்னர்   பாதுகாகத்துக்  கொள்ள வேண்டும்.  வைரஸ்  பரவலை  கட்டுப்படுத்த முடியாவிடின்  பாரிய   விளைவுகள ஏற்படும்.  ஆகவே தற்போது    சிகிச்சை  நடவடிக்கைகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளவர்கள்  முழுமையான ஒத்துழைப்பினை   வழங்க வேண்டும். என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30