கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள உலக நாடுகள்!

Published By: Vishnu

11 Mar, 2020 | 03:57 PM
image

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 115,000 ஐயும் கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது, 4,200 க்கும் அதிகமாகவுள்ளது.

இந் நிலையில் உலக நாடுகள் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு சவால்களை எதிர்கொண்ட வண்ணமே இன்னும் உள்ளன.

கடந்த வாரங்களாக சீனாவில் கொரோனவினால் ஆயிரக் கணக்கானோர் தினசர பாதிப்படைந்த நிலையில் நேற்றுமுன்தினம் 19 பேரும், நேற்றைய தினம் 24 பேரும் கொரோனாவினால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளிலிருந்து சீனாவுக்கு திரும்புபவர்களே ஆவர். 

எனினும் சீனாவுக்கு அண்மையிலுள்ள நாடுகளான ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் நேற்றைய தினம் மாத்திரம் அதிகளவானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி ஜப்பானில் நேற்று மாத்திரம் 54 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ஜப்பான் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. 

அதேபோன்று தென்கொரிய அதிகாரிகள் நேற்றைய தினம் 242 புதிய கொரோனா நோயாளர்களை அடையாளம் கண்டுள்ளதாக உறுதிப்படுத்தினர். இதன் மூலம் அங்கு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 7,755 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாக காணப்படும் நாடு தென் கொரியா ஆகும். எனினும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அந் நாட்டு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு சர்வதேச நாடுகள் பாராட்டியுள்ளன.

குறிப்பாக தென் கொரியா இதுவரை சுமார் 200,000 பேரை கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனைக்குட்படுத்தியுள்ளது.

அது மாத்திரமல்லாது மேற்கத்தைய நாடுகளும் கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு போராட்டங்களை தொடர்ந்த வண்ணமே உள்ளன. 

அமெரிக்காவில் கொரோனாவினால் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல மாநிலங்களில் அவசரகால நிலைகளும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இத்தாலி அதன் சுகாதார அமைப்பு சமாளிக்க போராடுவதால் அதன் பல்வேறு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளது. அதே நேரத்தில் ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்தோரும் தமது அன்றாட வாழக்கைய முன்னெடுக்க பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17