குறைந்த செலவில் தீயணைப்பு வாகனத்தை உருவாக்கிய பிரதேசசபை

Published By: Digital Desk 3

11 Mar, 2020 | 02:46 PM
image

சாதாரண தண்ணீர் தாங்கி வாகனம் ஒன்றில் தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களை எற்படுத்தி தீயணைப்பு வாகனமாக உருமாற்றம் செய்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையால் பரீட்சித்து பார்க்கப்பட்டது.

இது தொடர்பாக ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம், எமது பிரதேசபைக்கு தீயணைப்பு வாகனம் ஒன்றின் அவசியத்தை கருத்தில் கொண்டு உள்ளுராட்சி ஆளுகை நிறுவனத்துடன் தொடர்புகொண்டு அவர்களது 5 இலட்சம் ரூபாய் நிதிஉதவியுடன் பிரதேசசபையினரின் தொழில்நுட்ப அறிவினையும் பயன்படுத்தி குறித்த தீயணைப்பு வாகனம் உருவாக்கபட்டுள்ளது. 

வடமாகாணத்திலே குறைந்தளவு நிதியினை செலவளித்து இவ்வியந்திரத்தை உருவாக்கியுள்ளோம். இதனை இன்று பரீட்சித்து பார்த்துள்ளோம். இனிவரும் காலங்களில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி தீ விபத்துக்களை தடுப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளோம்.

குறித்த வாகனம் தீயணைப்பு வாகனத்தை ஒத்தவகையில் அதிதிறன் வாய்ந்தவாறு உருவாக்கப்பட்டுள்ளதுடன் பகல் வேளைகளில் 024-2225737என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் இரவு வேளைகளில்  0773634511 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58