இராணுத்திலிருந்து தப்பிச் சென்ற 4 ஆயிரத்து 600 இராணுவ சிப்பாய்கள் பொது மன்னிப்பின் கீழ் இராணுவ சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதில், 4229 இராணுவ சிப்பாய்களும் 206 கடற்படையினரும் 165 விமானப்படையினரும் உள்ளடங்குவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர சிறிசேன தெரிவித்தார். 

இதேவேளை,  இம்மாதம் 13 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை குறித்த பொதுமன்னிப்புக் காலமானது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.