கொழும்பு துறைமுக தொழிலாளர்கள் துறைமுகத்தின் முக்கிய கட்டிடத்தின் மீது மேற்கொண்டு வரும் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று மற்றுமொரு தொழிலாளி இணைந்து கொண்டுள்ளார்.

குறித்த உண்ணாவிரத போராட்டமானது ஊக்கச் சம்பளங்கள் வழங்குவது மற்றும் வற்வரி தொடர்பான பிரச்சனைகளை முதன்மையாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதேவேளை, குறித்த பிரச்சனைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியிருந்த போதும் குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பிரச்சனைகளுக்கு இதுவரை தீர்வு வழங்கவில்லையென தொழிலாளர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.