இரு இலங்கையர்களுக்கு கொரோனா : ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Published By: Priyatharshan

11 Mar, 2020 | 05:50 AM
image

கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான  இரு இலங்கையர்கள் உள்ளிட்ட 15 பேர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாலியர்கள் மூவர், ஐக்கிய அரபு இராஜ்ஜியம், பிரிட்டன், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா இருவர், ஜேர்மனி, தென்னாபிரிக்கா, தன்சானியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் வீதம் 15 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் கொரோனா வைரஸ் தொற்று குறித்த  தடுப்பு நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்துவதன் மூலம் கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்கள் கண்டறியப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை கொரோனா வைரஸினால் உலகளாவிய ரீதியில் 4,018 பேர் உயிரிழந்துள்ளதுடன் 113,009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சீனாவில் மாத்திரம் கொரோனாவின் தாக்கத்தால் 3,136 பேர் உயிரிழந்துள்ளதுடன் 80,754 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30