பிடியாணை உத்தரவுக்கு எதிராக ரவி கருணாநாயக்க தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனை நாளை!

Published By: Vishnu

10 Mar, 2020 | 07:16 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

தம்மை கைதுசெய்ய கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை, செல்லுபடியற்றதாக அறிவிக்குமாறு கோரி முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட நால்வர் மேன் முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனு தாக்கல் செய்துள்ளனர். 

இந் நிலையில் குறித்த ரீட் மனுவை நாளைய தினம் பரிசீலனைக்கு எடுக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.

அதன்படி இந்த ரீட் மனுவில் பிரதிவாதிகளாக பெர்யரிடப்பட்டுள்ள சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர்  உள்ளிட்ட ஆறு பேருக்கு நாளைய தினம் மன்றில் ஆஜராகுமாறும் மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தல் விடுத்தது.

கடந்த  2016 ஆம் ஆண்டு மார்ச் 29  ஆம் திகதி மற்றும் மார்ச்  31 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின் போது நிக்ழ்ந்ததாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால், கோட்டை நீதிவான் நீதிமன்றில் கடந்த  4 ஆம் திகதி புதிய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே, சி.ஐ.டி.யின் கோரிக்கைக்கு அமைவாக 10 பேரை கைது செய்ய கடந்த 6 ஆம் திகதி உத்தர்வு பிறப்பிக்கப்ப்ட்டது.   

இந்த ஏலத்தின் போது 51.98 பில்லியன் ரூபா முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டதாக  குற்றம் சுமத்தப்ப்ட்டுள்ள நிலையில்,  அது தொடர்பிலேயே ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் உட்பட 10 பேரைக் கைது செய்ய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில் ஒருவர் தற்போதும் கைதாகி விளக்கமறியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31