கிராண்ட் பிரின்சஸ் குரூஸ் கப்பலில் பயணிகளுக்கு சேவை செய்யும் பிரபல சமையற்காரா்

Published By: Digital Desk 3

10 Mar, 2020 | 07:30 PM
image

பிரபல ஸ்பானிஷ்-அமெரிக்க சமையற்காரரான ஜோஸ் ஆண்ட்ரேஸ் கிராண்ட் பிரின்சஸ் குரூஸ் கப்பலில் பயணிகளுக்கு சேவை செய்ய முன்வந்துள்ளார்.

அதாவது தனது தொண்டு அமைப்பான “உலக மத்திய சமையலறையை ” கிராண்ட் பிரின்சஸ் குரூஸ் பயணக் கப்பலுக்கு அருகில் முகாம் அமைத்து பயணிகளுக்கு இலவாசமாக உணவளிக்கின்றார்.

“ உலக மத்திய சமையலறை ” என்பது இயற்கை பேரழிவுகளை அடுத்து உணவு வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அரச சார்பற்ற அமைப்பாகும். பிரபல சமையற்காரர் ஜோஸ் ஆண்ட்ரேஸால் 2010 இல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு, ஹெயிட்டியில்  ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து உணவு தயாரித்து கொடுத்தது.

கிராண்ட் பிரின்சஸ் குரூஸ் கப்பலில் 50 நாடு­களைச் சேர்ந்த 3500 பய­ணிகள் தங்­கி­யுள்­ளனர். இதில் முதற்­கட்­ட­மாக 46 பேருக்கு நடை­பெற்ற பரி­சோ­த­னையில் 21 பேருக்கு பாதிப்பு இருப்­பது உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ள­தாக அமெ­ரிக்க துணை ஜனா­தி­பதி மைக் பென்ஸ் இதனை அறி­வித்­துள்ளார்.

தற்போது குறித்த கப்பல் ஓக்லாந்து துறைமுகத்தில் உள்ளது. சில பயணிகள் நேற்று திங்கட்கிழமை முதல் வெளியேற தொடங்கியுள்ளார்கள்.

உலக மத்திய சமையலறை அமைப்பு ஜப்பானில் உள்ள டயமண்ட் பிரின்சஸ் பயணக் கப்பலில் இருந்தவர்களுக்கு உணவளித்தது.

மேலும், அனைத்து வகையான அவசரகால சூழ்நிலைகளின் முன் வரிசையில் இருப்பது இலாப நோக்கற்ற செயற்பாடாகும். அந்தவகையில் சூறாவளி, காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த குழு உணவு வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52