மைத்திரி கழுகா? தவளையா?

Published By: J.G.Stephan

10 Mar, 2020 | 04:12 PM
image

பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பொது­வாக கொழும்பு, கம்­பஹா போன்ற சில மாவட்­டங்கள் நட்­சத்­திர வேட்­பா­ளர்­களால் கூடுதல் கவ­னிப்பைப் பெறு­வது வழக்கம். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கடந்த முறை குரு­நாகல் மாவட்­டத்தில் போட்­டி­யிட்­டதை அடுத்து, அனை­வ­ரி­னது கவ­னமும் அங்கு திரும்­பி­யி­ருந்­தது.இந்­த­முறை கொழும்பு, குரு­நாகல் போன்ற முக்­கி­ய­மான மாவட்­டங்­களை விட கூடுதல் கவ­னிப்பைப் பெறப் போகின்ற மாவட்­ட­மாக இருக்கப் போவது பொலன்­ன­றுவை மாவட்டம் தான்.ஏனென்றால், முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொலன்ன­றுவை மாவட்­டத்தில் போட்­டி­யிடப் போவ­தாக அறி­வித்­தி­ருக்­கிறார்.ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ராக இருக்கும் அவர், பொலன்­ன­று­வையில் தனக்கு உள்ள வாக்கு வங்­கியைக் கொண்டு, பொது­ஜன பெர­மு­ன­வுக்குள் அதி­காரம் செலுத்த முனைந்தார்.

நாற்­காலி சின்­னத்­தி­லேயே ஸ்ரீலங்கா சுதந்­திர பொது­ஜன கூட்­ட­ணியின் கீழேயே போட்­டி­யிட வேண்டும் என்று நிபந்­த­னை­களைப் போட்டுப் பார்த்தார். பொது­ஜன பெர­முன அதற்கு இணங்­க­வில்லை.கடை­சியில், வேறு வழி­யின்றி பொது­ஜன பெர­மு­னவின் கீழ், மொட்டு சின்­னத்தில் போட்­டி­யிட இணங்­கி­யி­ருக்­கிறார்.  அவ­ருக்கு தேசியப் பட்­டியல் ஆசனம் தரு­வ­தாக பொது­ஜன பெர­முன கூறி­யது. அது அவ­மானம் என்று மறுத்து விட்டு மொட்டு சின்­னத்­தி­லா­வது தனது பலத்தை நிரூ­பிக்க வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்­டி­ருக்­கிறார்.  2015 இல் ஒட்டு மொத்த நாடும் பெரும் எதிர்­பார்ப்­பு­க­ளுடன் தெரிவு செய்த ஒரு தலைவர், பொலன்­ன­றுவை மாவட்ட மக்­களின் அங்­கீ­கா­ரத்­துக்­காக போட்­டி­யிடும் நிலைக்கு கீழ் இறங்­கி­யி­ருக்­கிறார்.

அவர், கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லுக்குப் பிறகு அர­சி­யலில் இருந்து கௌர­வ­மாக ஒதுங்­கி­யி­ருக்­கலாம் அல்­லது ஓய்­வு­பெற்­றி­ருக்­கலாம் ஆனால், அவர் அவ்­வாறு செய்­ய­வில்லை.முன்னாள் ஜனா­தி­ப­தி­களில் ஜே.ஆர் ஜய­வர்த்­தன முது­மை­யினால் அர­சி­ய­லி­லி­ருந்து ஓய்­வு­பெறும் நிலைக்கு தள்­ளப்­பட்டார். டி.பி விஜே­துங்க போட்டி அர­சி­ய­லி­லி­ருந்து ஒதுங்­கினார். சந்­தி­ரிகா குமா­ர­துங்க வேறு­வ­ழி­யின்றி மஹிந்த ராஜபக் ஷ கட்­சியைப் பிடுங்கிக் கொண்­டதும், அர­சி­ய­லி­லி­ருந்து ஒதுங்­கினார்.ஆனால், ஆட்­சி­யையும் கட்­சி­யையும் இழந்த போதும் மஹிந்த ராஜபக் ஷ அர­சி­யலை விட்டு ஒதுங்­காமல், ஓய்­வு­பெ­றாமல், புதிய கட்­சியை தொடங்கி தனக்­கான புதிய அர­சி­யலை ஆரம்­பித்தார்.மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆட்­சியை இழந்­தாலும் கட்­சியை இழக்­க­வில்லை. அந்த 'கைத்­தடி' தான், அவரை அர­சி­ய­லி­லி­ருந்து விலகிச் செல்­லாமல் காப்­பாற்றி வரு­கி­றது.  அதன் உத­வி­யுடன், மஹிந்த ராஜபக் ஷ வைப் போல மீண்­டெழ முடியும் என்று அவர் கற்­பனைக் கோட்­டை­களைக் கட்டிக் கொண்­டி­ருக்­கிறார்.

மைத்­தி­ரி­பால சிறி­சேன ஒரு கார்ட்போட் வீரர். பெரிய எதிர்­பார்ப்­பு­க­ளுடன் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட போதும் சரி­யான நேரத்தில் சரி­யான முடி­வு­களை எடுக்கத் தெரி­யா­த­வ­ராக தவ­றாக முடி­வு­களை எடுக்­கின்ற ஒருவர் என்ற அடை­யா­ளப்­ப­டுத்­த­லுடன் தான் கடந்த நவம்பர் மாதம் பத­வியை விட்டு விலகிச் சென்றார்.

19 ஆவது திருத்தச் சட்­டத்­தினால், தனக்கு நிறை­வேற்று அதி­கா­ரங்கள் இல்லை என்றும் அதனால் எதையும் செய்ய முடி­யாமல் இருக்­கி­றது என்றும் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ கூறு­கிறார். அதற்­கா­கவே, மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் புதிய அர­சாங்கம் அமைக்க வேண்டும் என்றும் மக்­க­ளா­ணையைக் கோரு­கிறார்.

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை 19 ஆவது திருத்­தச்­சட்டம் கட்­டுப்­ப­டுத்­த­வில்லை. அவர், 18 ஆவது திருத்­தச்­சட்­டத்தில் இருந்த பெரும்­பா­லான அதி­கா­ரங்­களைக் கொண்­டி­ருந்தார். அவரால், ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்­கத்­துடன் முட்டி மோதி­யி­ருக்க முடியும். ஆனால் குறுக்­கு­வ­ழியில் ஆட்­சியைக் கவிழ்க்கும் நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­ததை தவிர, வேறெ­தையும் செய்­ய­வில்லை. அவ­ரது இந்த இயல்பு நாட்டு மக்­க­ளி­டத்தில் நம்­பிக்­கை­யீ­னத்தை ஏற்­ப­டுத்­தி­யது.அவர் மீண்டும் ஒரு­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்க முடி­யாத நிலை ஏற்­பட்­டது.

இப்­போது அவர், தனது சுய­ம­ரி­யா­தையைக் கூட இழந்து போய் மொட்டுச் சின்­னத்தின் ஊடா­க­வேனும் பாரா­ளு­மன்­றத்­துக்குள் நுழை­வ­தற்கு தயா­ராகி விட்டார்.மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ராஜபக் ஷவினர் யாரும் தமக்­கான போட்­டி­யாக கரு­த­வில்லை. அவ­ரையும் அவ­ரது தலை­மை­யி­லான சுதந்­திரக் கட்­சி­யையும் தமது கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்க முடியும் என்­பது அவர்­களின் நம்­பிக்கை.அவ­ருக்கு போட்­டி­யா­கவும் தலை­வ­லி­யா­கவும் இருப்­பவர் பொது­ஜன பெர­மு­னவின் பொலன்­ன­றுவை மாவட்ட அமைப்­பாளர் ரொஷான் ரண­சிங்க தான். அவர் தான், பொது­ஜன பெர­மு­னவின் முதன்மை வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டுவார். அவ­ருக்குக் கீழ் தான் மைத்­தி­ரி­பால சிறி­சேன போட்­டி­யிட முடியும். அது­பற்­றி­யெல்லாம் மைத்­திரி கவலை கொள்­ள­வில்லை.அதனால் தான், மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு மொட்டு சின்­னத்தில் போட்­டி­யிட வெட்கம் இல்­லையா என்று கேட்­டி­ருந்தார் ரொஷான் ரண­சிங்க. பொலன்­ன­றுவை மாவட்­டத்தை அபி­வி­ருத்தி செய்யும் நிதியில் நான்­கா­யிரம் கோடி ரூபாவை அவர் மோசடி செய்­துள்ளார் என்றும் ரொஷான் ரண­சிங்க குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார்.

அண்­மையில் ரொஷான் ரண­சிங்­கவின் ஏற்­பாட்டில் பொலன்­ன­று­வையில் ஒரு கூட்டம் நடந்­தது. அதில் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவும் பங்­கேற்­றி­ருந்தார். மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அழைப்பு விடுக்­கப்­ப­ட­வில்லை. அன்று பொலன்­ன­று­வையில் மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது தேர்தல் அலு­வ­ல­கத்தை திறந்து வைத்தார். அந்த நிகழ்வில் மைத்­தி­ரி­பால சிறி­சேன நிகழ்த்­திய உரை பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

'அண்­மையில் நான் நடை­ப­யிற்சி மேற்­கொண்­டி­ருந்த போது, நீர்க்­காகம், ஒரு மீனைப் பிடிப்­பதைக் கவ­னித்தேன். அதனை அரு­கி­லுள்ள ஒரு பாறையின் மேல் அமர்ந்து சாப்­பிட ஆரம்­பித்­தது. அப்­போது, திடீ­ரென பறந்து வந்த ஒரு கழுகு, நீர்க்­கா­கத்­திடம் இருந்து மீனைப் பறித்துக் கொண்டு போனது நாங்­களும் அந்தக் கழு­கு­போல தாக்­குவோம்' என்று மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யி­ருந்தார்.

'நீர்க்­கா­கத்­திடம் இருந்து இரையைப் பறித்­தெ­டுத்த கழுகு போல செயற்­ப­டுவோம்' என்ற மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கருத்து, பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.குறிப்­பாக பொது­ஜன பெர­மு­னவின் இரண்டாம் மட்ட தலை­வர்கள் இதனால் கோப­ம­டைந்­தி­ருக்­கி­றார்கள்.இந்த விவ­காரம் குறித்து பொது­ஜன பெர­மு­னவின் பேச்­சாளர் ஜி.எல்.பீரி­ஸிடம் கேள்வி எழுப்­பிய போது, மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் பொது­ஜன பெர­மு­ன­வுக்கு ஆபத்து இல்லை என்று கூறி­யி­ருந்தார். ஆனால் அவர்கள் உசா­ரா­கி­யி­ருக்­கி­றார்கள். மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஆட்­க­ளுக்கு பொதுத் தேர்­தலில் மக்கள் வாக்­க­ளிக்கக் கூடாது என்று அமைச்சர் பிர­சன்ன ரண­துங்க வெளிப்­ப­டை­யா­கவே பேசி­யி­ருக்­கிறார்.மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் மீது ராஜபக் ஷவி­னரால் முழு­மை­யான நம்­பிக்கை கொள்ள முடி­யாது என்­பது உண்மை தான்.

ஏனென்றால், 2014இல் மஹிந்த ராஜபக் ஷவுடன் முதல் நாள் இரவு அப்பம் சாப்­பிட்டுக் கொண்­டி­ருந்த மைத்­திரி மறுநாள் காலை பொது வேட்­பா­ள­ராக தன்னை அறி­வித்துக் கொண்டார்.அதற்குப் பின்னர் அப்பம் என்­பது அர­சியல் குழி­ப­றிப்­புக்­கான ஒரு அடை­யா­ள­மாக பார்க்­கப்­பட்­டது.அது­போலத் தான்,  கழுகு போல இரையை (ஆட்­சியை) கொத்திக் கொண்டு போய் விடு­வாரோ என்ற பேச்­சு­களும் அர­சியல் வட்­டா­ரங்­களில் உலா­வு­கின்­றன.மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கழுகு கதைக்கு பதி­லடி கொடுக்கும் வகையில் தான், முன்­னைய அர­சாங்­கத்தின் தலை­வர்கள் கழு­கு­க­ளாக இருக்க முயன்ற போது நாட்டு மக்­களே கஷ்­டப்­பட்­டனர் என்று பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ கூறி­யி­ருந்தார்.

மைத்­தி­ரி­பால சிறி­சேன கழு­கு­போல இனிமேல் தான் தாக்­குவார் என்­றில்லை. அவர் ஏற்­க­னவே முன்­னைய அர­சாங்­கத்தில் கூட அவ்­வாறு தான் நடந்து கொண்டார் என்­பதை மறை­மு­க­மாக குறிப்­பிட்­டி­ருக்­கிறார் மஹிந்த ராஜபக் ஷ.கழுகு போல தாக்கப் போவ­தாக, மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறிய பின்­னரும் அவ­ரையோ அவர் சார்ந்­த­வர்­க­ளையோ ராஜபக் ஷவின் தமது சிற­குக்குள் வைத்­தி­ருக்க முனை­வார்­களா என்­பது சந்­தேகம் தான்.ராஜபக் ஷவி­ன­ருக்கு தற்­போது தேவைப்­ப­டு­வது மூன்றில் இரண்டு பெரும்­பான்மை. அதனைப் பெறுவதற்கு சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கி அவர்களுக்கு அவசியம்.மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்து விட்டால், மைத்திரிபால சிறிசேனவைப் போன்ற கழுகுகளை ராஜபக் ஷவினர் விட்டு வைக்கமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் ஏற்கனவே ஒருமுறை கழுகிடம் இரையைப் பறிகொடுத்தவர்கள், இனிமேல் உசாராக நடந்து கொள்வார்கள்.

அதேவேளை மைத்திரிபால சிறிசேன தன்னைக் கழுகு என்று ஒப்பிட்டிருந்தார். ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியாகியிருந்த அந்தச் செய்தி குறித்து, கருத்து  ஒன்றைப் பதிவு செய்திருந்த  ஒருவர் அவர் கழுகு அல்ல நச்சுப் பாம்பு என்று குறிப்பிட்டிருந்தார்.உண்மையில் அவர் கழுகும் அல்ல பாம்பும் அல்ல தவளை என்பதே பொருத்தம்.'நுழலும் (தவளை) தன் வாயால் கெடும்' என்ற பழமொழியை அறிந்தவர்களுக்கு இது எந்தளவுக்கு பொருத்தமானது என்பது புரியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04