இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி 

Published By: Digital Desk 3

10 Mar, 2020 | 11:41 AM
image

2019 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 2020 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் தொகை, 17.7 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

சீனாவின் வுஹானில் தோற்றம் பெற்று சர்வதேச நாடுகளில் மிக  வேகமாகப் பரவிவரும் கொரோனாவின் தாக்கமே இதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது. 

2019 ஆம் ஆண்டு ஜனவரியில் 244,239 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். எனினும், 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் 228,434 பேர் மாத்திரம் வருகை தந்துள்ளனர். இது 6.5 வீத வீழ்ச்சியை எடுத்துக் காட்டுகிறது. 

இதேவேளை,  2019 ஆம் ஆண்டு  பெப்ரவரியில் 252,033 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். எனினும், 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் 207,507 பேர் மாத்திரம் வருகை தந்துள்ளனர். இது 17.7 வீத வீழ்ச்சியை எடுத்துக் காட்டுகிறது. 

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவிலிருந்து 41,448 பேரும், சீனாவிலிருந்து 22,363 பேரும், பிரிட்டனிலிருந்து 21,138 பேரும், ரஷ்யாவிலிருந்து 19,616 பேரும், ஜேர்மனிலிருந்து 11,494 பேரும், பிரான்ஸிலிருந்து 9,352 பேரும், உக்ரேனலிருந்து 8,549 பேரும் மற்றும்  அவுஸ்திரேலியா 8,115, அமெரிக்கா 7,494, போலாந்து 5,577 பேர் என, சுற்றுலாப் பயணிகள் உள்ளடங்கலாக ஏனைய நாடுகளிலிருந்தும் மொத்தமாக 228,434 பேர் இலங்கை வந்துள்ளனர். 

2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியாவிலிருந்து 35,309, பிரிட்டனிலிருந்து 26,348, ரஷ்யாவிலிருந்து 20,948, ஜேர்மனிலிருந்து 16,405, பிரான்ஸிலிருந்து 11,430, அவுஸ்திரேலியாவிலிருந்து 9,578, அமெரிக்காவிலிருந்து 7,803, உக்ரேனிலிருந்து 6,072, கனடாவிலிருந்து 5,482, போலாந்திலிருந்து 4,693 சுற்றுலாப் பயணிகளும் உள்ளடங்கலாக மொத்தம் 207,507 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 

இது தவிர, 2020 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் சீனாவிலிருந்து 2,058 சுற்றுலாப் பயணிகள் மாத்திரம் வருகை தந்துள்ளனர். இதனால், கடந்த 2012 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன் முறையாக இலங்கைக்கு சுற்றுலா வரும் முதல்தர 10 நாடுகள் பட்டியலில் சீனா இடம்பிடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43