யானையா? தொலை­பே­சியா?: இணக்­க­மில்­லாத நிலைப்­பாட்டில் ரணில் - சஜித் அணி­யினர்

Published By: J.G.Stephan

10 Mar, 2020 | 10:51 AM
image

(ஆர்.யசி)

ஐக்­கிய தேசிய கட்­சி­யாக யானை சின்­னத்தில் பய­ணிப்­பதே இறுதித் தீர்­மா­ன­மென ரணில் அணி­யி­னரும் தொலை­பேசி சின்­னத்தில் ஐக்­கிய மக்கள் சக்­தி­யாக 22 மாவட்­டங்­களில் போட்­டி­யி­டுவோம் என சஜித் தரப்­பி­னரும்  ஏட்­டிக்கு போட்­டி­யான நிலைப்­பாட்டை கொண்­டுள்ள நிலையில் இரு­த­ரப்பு ஓர­ணி­யாக கள­மி­றங்­கு­வது என்ற விட­யத்தில் பெரும்­பின்­ன­டைவு நிலை ஏற்­பட்­டுள்­ளது.

  ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யினர் இம்­முறை பொதுத் தேர்­தலில் எந்த சின்­னத்தில் போட்­டி­யி­டு­வது என்­பதில் பாரிய  முரண்­பா­டான நிலை ஏற்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய தேசிய கட்­சி­யாக யானை சின்­னத்தில் தாம் இம்­முறை போட்­டி­யி­ட­வுள்­ள­தா­கவும் சஜித் பிரே­ம­தாச அணி­யினர் தம்­முடன் இணைந்­து­கொள்ள வேண்டும் எனவும் ரணில் தரப்­பினர் தெரி­வித்­துள்ள நிலையில்,  கட்­சியின் பொதுச் செய­லாளர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் தமது நிலைப்­பாட்டை தேர்­தல்கள் ஆணை­கு­ழு­விற்கு அறி­வித்­தி­ருந்தார். அத்­துடன் 22 தேர்தல் மாவட்­டங்­க­ளிலும் யானை சின்­னத்­தி­லேயே போட்­டி­யி­டுவோம் எனவும் அவர் அறி­வித்­துள்ளார். அதேபோல்  சஜித் அணியின் உறுப்­பி­னர்கள் தாம் தொலை­பேசி சின்­னத்தில் 22 மாவட்­டங்­க­ளிலும் போட்­டி­யி­டு­வ­தாக தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­விற்கு அறி­வித்­துள்­ளனர். 

இந்­நி­லையில் இரு தரப்­பி­னரும் தனித்­த­னியே  அவர்­களின் சின்­னங்­களை பிர­சித்தி படுத்தி பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ளனர். ரணில் தரப்­பி­ன­ரான  நவீன் திசா­நா­யக உள்­ளிட்ட சிலர் தமது தேர்தல் மாவட்­டங்­களில் ஐக்­கிய தேசிய கட்சி யானை சின்­னத்தில் கள­மி­றங்கும் என பிரச்­சா­ரங்­களை முன்­னெ­டுக்க ஆரம்­பித்­துள்­ளனர். 

நுவ­ரெ­லிய தொகுதி அமைப்­பா­ளர்­களை சந்­தித்த நவீன் திசா­நா­யக தாம் யானை சின்­னத்தில் பய­ணிப்­ப­தாக தீர்­மானம் ஒன்­றி­னையும் நிறை­வேற்­றி­யுள்ளார். இதன்­போது அவர் கூறு­கையில் ' கட்சி இரண்­டாக பிள­வு­படும் என தெரி­கின்­றது. இந்­நி­லையில் ஐக்­கிய தேசிய கட்­சியும் யானை சின்­ன­முமே பழ­மை­யா­ன­தாகும். அதனை நிரா­க­ரித்து பய­ணிக்க முடி­யாது. எனவே ஐக்­கிய தேசிய கட்சி யானை சின்­னத்தில் போட்­டி­யிடும். எமது தொகுதி அமைப்­பா­ளர்கள் அதற்­கான அங்­கீ­கா­ரத்தை கொடுத்­துள்­ளனர் என கூறி­யுள்ளார். 

 அதேபோல் சஜித் தரப்பு உறுப்­பி­ன­ரான ரஞ்சித் மத்­து­ம­பண்­டார தனது தேர்தல் தொகு­தி­யான மொன­ரா­கல மாவட்ட தொகுதி அமைப்­பா­ளர்­களை சந்­தித்த வேளையில் தாம் தொலை­பேசி சின்­னத்தில் பய­ணிக்­க­வுள்­ள­தாக தீர்­மானம் ஒன்­றினை நிறை­வேற்­றி­யுள்ளார். இதன்போது அவர்  கருத்துத் தெரிவிக்கையில்

 ஐக்கிய தேசிய கட்சி இணக்கப்பாடுகளுக்கு வருவதாக இல்லாத விடத்து எம்மால் தேர்தலில் பலவீனமடைய முடியாது. எமக்கு தொலைபேசி சின்னம் உள்ளது அதனை பிரதானப்படுதி எமது பிரசாரங்களை முன்னெடுக்கவுள்ளோம்" என குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47