அரசியலமைப்பின் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி வைத்திருக்க முடியாது -  பொன்சேகா 

Published By: Vishnu

09 Mar, 2020 | 06:09 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசியலமைப்பின் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சை தன்னகத்தே கொண்டிருக்க முடியாத ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ எவ்வாறு பாதுகாப்பு துறையினருக்கு கட்டளையிட முடியும் என்று கேள்வியெழுப்பிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா, உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்களைப் போன்று மீண்டுமொரு சம்பவம் இடம்பெற்றால் நாட்டில் பொறுப்பு கூறுவதற்கும் யாரும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

மீரிகம பிரதேசத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றி விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பாராளுமன்றத்தில் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. நானும் அதில் அங்கத்துவம் வகித்த போதிலும் , 68 பக்கங்களில் நான் தனியாக ஒரு அறிக்கை தயாரித்திருக்கிறேன். அதில் முதலாவது குற்றவாளியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், இரண்டாவது குற்றவாளியாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், முன்றாவது குற்றவாளியாக நீதித்துறை அமைச்சரையும், நான்காவது குற்றவாளியாக முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவையும் குறிப்பிட்டிருக்கிறேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் இலங்கையை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று ஐக்கிய தேசிய கட்சியில் அங்கத்துவம் வகித்த சிலர் வெளியிட்ட கருத்துக்கள் என்பனவே ஜனாதிபதித் தேர்தலில் நாம் தோல்வியடைக் காரணமாக அமைந்தது. இறுதி நேரத்தில் இவ்வாறு நடைபெற்றாலும் 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினோம்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தேர்தல் காலத்தில் வியத்மக அமைப்பினரால் எழுதிக் கொடுக்கப்பட்ட குறிப்புக்களை வாசித்தமையால் அவருக்கு வழங்கிய வாக்குறுகிகள் கூட நினைவில் இல்லை. எனவே சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40