உள்ளகப் போட்டியால் தடுமாறும் தமிழ் அரசியல்

Published By: Digital Desk 3

09 Mar, 2020 | 04:02 PM
image

பாரா­ளு­மன்றத் தேர்தல் வரப்­போ­வது உறு­தி­யா­கி­யுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில், யாழ்ப்­பா­ணத்தில் அர­சியல் கருத்­த­ரங்­குகள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

யாழ். வீர­சிங்கம் மண்­ட­பத்தில் பெரி­ய­ள­வி­லான கருத்­த­ரங்கு நடத்­தப்­பட்­டது. வட­ம­ராட்சி, வலி­காமம், தென்­ம­ராட்சி என பிர­தேச ரீதி­யா­கவும் அர­சியல் கருத்­த­ரங்­குகள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

இங்­கெல்லாம், கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­திரன் தான், பிர­தான பேச்­சா­ள­ராகப் பங்­கேற்று வரு­கிறார். கருத்­தா­ளர்­களின் விமர்­ச­னங்­க­ளுக்கு பதி­ல­ளித்­தி­ருந்தார்.

பிறர் மீது அவர் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்­கவும் தவ­ற­வில்லை. அதே­வேளை, தம் மீதான குற்­றச்­சாட்­டு­களை ஏற்றுக் கொள்­ளவும் அவர்  தயங்­க­வில்லை.

பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படப் போகி­றது என்­பதை, யாழ்ப்­பாண மக்கள் அறிந்­தே­யி­ருந்­தாலும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் இந்த கருத்­த­ரங்­குகள் தேர்தல் வரப் போகி­றது என்­ப­தற்கு கட்­டியம் கூறு­வ­தாக அமைந்­தி­ருந்­தன.

கூட்­ட­மைப்­புக்கு மாற்­றான அணி தாமே என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியும் தமிழ் மக்கள் தேசியக் கூட்­ட­ணியும் கூறி­வ­ரு­கின்ற போதிலும், கூட்­ட­மைப்­புக்குப் போட்­டி­யான இத்­த­கைய பெரி­ய­ள­வி­லான கருத்­த­ரங்­குகள் எதையும் நடத்­து­வதில் ஆர்வம் காட்­ட­வில்லை.

ஆனால், வடக்கு மாகா­ண­ச­பையின் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்­க­ர­நேசன் தலை­மை­யி­லான தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் மாத்­திரம் கூட்­ட­மைப்­புக்குப் போட்­டி­யாக அர­சியல் விளக்க கருத்­த­ரங்கு ஒன்றை நடத்­தி­யி­ருக்­கி­றது.

தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் கட்­சி­யாக அறி­விக்­கப்­பட்ட நிகழ்வில் ஆச்­ச­ரி­யப்­படும் வகையில் பெரு­ம­ள­வி­லா­ன­வர்கள் எவ்­வாறு ஒன்று கூடி­னரோ, அது­போ­லவே இந்தக் கருத்­த­ரங்­கிலும் மண்­டபம் நிறைந்த மக்கள் குழு­மி­யி­ருந்­தார்கள்.

இந் நிகழ்வில் உரை­யாற்­றிய தமிழ்த் தேசிய பசுமை இயக்­கத்தின் தலைவர் பொ.ஐங்­க­ர­நேசன், தமது கட்சி பொதுத் தேர்­தலில் தனித்தே போட்­டி­யிடப் போவ­தாக அறி­வித்­தி­ருந்தார்.

வடக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கு மிகவும் நெருக்­க­மா­ன­வ­ராக அவ­ரது அமைச்­ச­ர­வையின் விவ­சாய அமைச்­ச­ராக இருந்­தவர் பொ.ஐங்­க­ர­நேசன்.

அவர் மீது குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்டு, பதவி வில­கிய பின்­னரும் கூட இரு­வ­ருக்கும் இடையில் நல்ல நெருக்கம் இருந்­தது. விக்­னேஸ்­வரன் தனிக்­கட்சி ஆரம்­பித்த பின்னர், அவ­ரு­ட­னேயே ஐங்­க­ர­நேசன் கூட்­டணி வைத்துக் கொள்வார் என்றும் எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ஆனால் கடை­சியில் விக்­னேஸ்­வரன், சுரேஸ் பிரே­மச்­சந்­திரன், அனந்தி சசி­தரன், சிவா­ஜி­லிங்கம், சிறி­காந்தா ஆகி­யோ­ருடன் கூட்­டணி வைத்துக் கொள்ள, அந்த அணியில் கட்­சி­க­ளுக்கு சமத்­து­வ­மான பங்கு கேட்டு அந்தக் கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டதால் இணையும் முடிவில் இருந்து விலகிக் கொண்டார் ஐங்­க­ர­நேசன்.

இப்­போது அவர், தனித்துப் போட்­டி­யிட முடிவு செய்­தி­ருக்­கிறார். அவர் தனது முடிவை நியா­யப்­ப­டுத்தும் விதத்தில் கருத்­து­களை வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

சந்­தர்ப்­ப­வாத கூட்­ட­ணி­களில் இணைந்து பிழை­யா­ன­வர்­களை பலப்­ப­டுத்தி விடக்­கூ­டாது என்­ப­தற்­கா­கவே தனித்துப் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக அவர் கூறி­யி­ருக்­கிறார்.

அர­சி­யலில் சந்­தர்ப்­ப­வாதம் புதி­ய­தல்ல. பல­வே­ளை­களில் கொள்­கை­க­ளுக்கு முன்­பாக, சந்­தர்ப்­ப­வாதம் வெற்றி பெற்று விடு­கி­றது.

அர­சியல் கட்­சிகள் கூட்­ட­ணி­களை அமைக்கும் போது, சந்­தர்ப்­பத்­துக்­கேற்ப நடந்து கொள்­கின்­றன. அது கட்­சி­களின் இருப்­பு­க­ளுக்கு முக்­கி­ய­மா­ன­வை­யாக இருக்­கலாம்.

ஆனால், கட்­சி­களின் கொள்­கை­க­ளுக்கு அது ஏற்­பு­டை­ய­தாக இருக்கும் என்று கூற முடி­யாது.

எவ்­வா­றா­யினும், அர­சி­யலில் சந்­தர்ப்­ப­வாதம் தவிர்க்க முடி­யாத ஒன்­றா­கவே மாறி­விட்­டது. அதனை நியா­யப்­ப­டுத்திக் கொள்ளும் போக்கும் வளர்ந்து விட்­டது.

அதே­வேளை, பிழை­யா­ன­வர்கள் பல­ம­டைந்து விடக் கூடாது என்­ப­தற்­காக தனித்துப் போட்­டி­யி­டு­வ­தாக ஐங்­க­ர­நேசன் கூறி­யுள்ள கருத்து விவா­தத்­துக்­கு­ரி­யது.

இந்­த­முறை பாரா­ளு­மன்றத் தேர்தல் தமிழ் மக்­களைப் பொறுத்­த­வரை மிகவும் சவா­லா­னது. தமது பிர­தி­நி­தி­க­ளாக யாரைத் தெரிவு செய்­வது என்­பதில் தமிழ் மக்­க­ளுக்கு தெளிவு இருந்­தாலும் அவர்­களைக் குழப்­பு­கின்ற வகையில் அதி­க­ளவு தரப்­புகள் இருக்­கின்­றன.

எப்­போ­துமே வாய்ப்­புகள் குறை­வாக உள்ள போது தெரி­வு­களை செய்­வது சுல­ப­மா­னது. வாய்ப்­புகள் அதி­க­மாக இருக்கும் போது தெரி­வு­களைச் செய்­வது கடி­ன­மா­னது. 

அவ்­வா­றான கடி­ன­மா­ன­தொரு நிலையைத் தான், தமிழ் மக்கள் இந்த பொதுத் தேர்­தலில் எதிர்­கொள்ளப் போகி­றார்கள்.

விடு­தலைப் புலி­களின் காலத்தில் இருந்தே, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை தமது பிர­தி­நி­தி­க­ளாக தமிழ் மக்கள் பாரா­ளு­மன்­றத்­துக்கு அனுப்பி வரு­கி­றார்கள்.

புலிகள் தோற்­க­டிக்­கப்­பட்ட பின்னர், கூட்­ட­மைப்­புக்குள் இருந்து கஜேந்­தி­ர குமார்           தலை­மை­யி­லான தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி வெளி­யே­றிய போதும் அந்தப் பாரம்­ப­ரி­யத்தை அவர்கள் தொடர்ந்து முன்­னெ­டுத்து வந்­தனர்.

இப்­போது, கூட்­ட­மைப்­புக்குள் இருந்து மேலும் பல நபர்­களும் தரப்­பு­களும் வெளி­யேறி விட்ட நிலையில், கூட்­ட­மைப்­புக்கே தொடர்ந்து ஆத­ரவு கொடுப்­பதா அல்­லது தாங்­களே மாற்று அணி என்று போட்­டிக்கு களம் இறங்­கி­யுள்ள கூட்­ட­ணி­க­ளுக்கு ஆத­ரவு கொடுப்­பதா என்று தமிழ் மக்கள் திணறிக் கொண்­டி­ருக்கும் நிலையில் தான்,  தானும் தனித்துப் போட்­டி­யிடப் போவ­தாக அறி­வித்­தி­ருக்­கிறார் ஐங்­க­ர­நேசன்.

ஐங்­க­ர­நே­சனின் தமிழ்த் தேசிய பசுமை இயக்­கமும் தமிழ்த் தேசிய கொள்கை நிலைப்­பாட்டில் இருக்கும் கட்­சி­களில் ஒன்று தான். ஏற்­க­னவே தமிழ்த் தேசிய நிலைப்­பாட்டில் போட்­டி­யிடும் மூன்று தரப்­பு­க­ளுக்­கி­டை­யி­லான போட்­டியில் சிக்கிக் கொள்ள நேருமோ என்ற கவ­லையில் இருந்த தமிழ் மக்­க­ளுக்கு, இந்த அறி­விப்பு இன்னும் கலக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

2015 ஆம் ஆண்டு, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணிக்கும் கிடைத்த தமிழ் மக்­களின் வாக்­குகள், இப்­போது நான்­காக பிரிந்து போகின்ற நிலை உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

இந்த விரி­சலால் பாதிக்­கப்­படப் போகின்ற கட்­சி­யாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

இந்த இடத்தில் தனக்கு மூக்குப் போனாலும் பர­வா­யில்லை எதி­ரிக்கு (கூட்­ட­மைப்பு) சகுனப் பிழை­யாக அமைந்து விட வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே பல தமிழ்த் தேசிய கட்­சிகள் இருக்­கின்­றன.

பொதுத் தேர்­தலில் போட்­டி­யிட்டு ஆச­னங்­களை வெல்ல முடி­யாது என தெரிந்­தி­ருந்­தாலும் பல தரப்­புகள் வாக்­கு­களைப் பிரிக்கப் போட்டி போடு­கின்­றன.

இந்தப் போட்டி ஆரோக்­கி­ய­மான அர­சி­ய­லுக்­கா­ன­தா­கவோ தமிழ் மக்­களின் நல­னுக்­கா­ன­தா­கவோ இருந்தால் வர­வேற்கக் கூடி­யது.

ஆனால், தமிழ்த் தேசியக் கட்­சிகள் தமக்­குள்ளே முட்டி மோதிக் கொண்டு சாதிக்கப் போவது எதனை என்­பது தான் கேள்­வி­யாக இருக்­கி­றது.

கூட்­ட­மைப்­புக்குப் போட்­டி­யாக யாரும் இருக்கக் கூடாது என்று நினைப்­பது ஜன­நா­யகம் அல்ல. அர­சி­யலில் போட்டி இருக்க வேண்டும். கட்­சி­க­ளுக்­கி­டையில் போட்டி இருக்கும் போது தான், ஜன­நா­யகம் செழிக்கும்.

ஆனால், அந்தப் போட்டி தமிழ் மக்­களின் உரி­மை­யையும் குர­லையும் பாதிப்­ப­தாக அமைந்து விடக்­கூ­டாது, கூட்­ட­மைப்­புக்குப் போட்­டி­யாக கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் ஒரு மாற்று அணியை உரு­வாக்க பதி­னொரு வரு­டங்­க­ளாகப் போராடிக் கொண்­டி­ருக்­கிறார்.

அவரால் ஒரு பாரா­ளு­மன்ற ஆச­னத்தைக் கூட இது­வரை பெற முடி­யாமல் இருக்­கி­றது.

இந்­த­நி­லையில் கூட்­ட­மைப்பில் இருந்து வெளி­யே­றிய தரப்­பு­களை ஒன்­றி­ணைத்து, அவர் பல­மான அணி ஒன்றை கட்­டி­யெ­ழுப்­பி­யி­ருக்க வேண்டும். அதனை அவரும் செய்­ய­வில்லை. கூட்­ட­மைப்பில் வெறுப்­ப­டைந்து வெளி­யே­றி­ய­வர்­களும் ஒத்­து­ழைக்­க­வில்லை.

இதனால் மூன்­றா­வது அணி உரு­வா­னது. இந்த மூன்­றா­வது அணி­யா­வது விட்டுக் கொடுப்­புகள், சம­ர­சங்­க­ளுக்கு தயா­ராக இருந்­ததா என்றால் இல்லை.

ஐங்­க­ர­நே­சனின் தமிழ்த் தேசிய பசுமை இயக்­கத்தைக் கூட தமது கூட்­ட­ணிக்குள் உள்­வாங்கக் கூடிய நிலையில் இல்லை. 

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் தமி­ழ­ரசுக் கட்சி கோலோச்­சு­கி­றது என்று போர்க்­கொடி எழுப்பிக் கொண்டு அங்­கி­ருந்து வெளியே வந்­த­வர்­களும் மாற்று அணி­க­ளுக்குள் தமி­ழ­ரசுக் கட்­சியைப் போன்றே செயற்­பட முனை­கி­றார்கள்.

இந்த முனைப்புத் தான், ஒன்­றாக இருந்த அணியை இன்று நான்­கா­கவோ ஐந்­தா­கவோ பிள­வு­ப­டுத்தி வைத்­தி­ருக்­கி­றது.

எல்லா தரப்­பு­களும் தாங்­களே சரி­யா­ன­வர்கள் என்று கூறிக் கொள்­கி­றார்கள். வேறொரு தரப்பை பிழை­யா­ன­வர்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்கிறார்கள்.

பிழையான தரப்பு பலமடைவதற்கு இடமளிக்கக் கூடாது என்று கூறிக் கொண்டு, தமிழ் மக்களைப் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

எங்குமே எந்தக் கட்சியுமே முற்றிலும் சரியானது என்றில்லை. தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் அரசியல் கட்சிகளில் எதுவுமே முற்றிலும் சரியானது என்று எவரும் கூற முடியாது.

பிழையான தரப்புகள் என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குள் பிரிவினையை வலுப்படுத்திக் கொள்ளும் போது, அதற்கு வெளியே உள்ள பிழையான தரப்புகள் தான் வலுவடையும். அவை கட்சி ரீதியாக மாத்திரமன்றி, பாராளுமன்ற பலத்தையும் பெறக் கூடும்.

பாராளுமன்ற ஆசனங்களுக்கான அரசியலை கைவிட்டு மக்களின் நலன் கருதி, தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தமது முடிவுகளையும் பிடிவாதங்களையும் மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.

அது தான், பிழையான தரப்புகளுக்கு வழிவிடுவதை தடுப்பதற்கான வழிமுறையாக இருக்குமே தவிர, தனித்தனியாகப் போட்டியிடுவது அல்ல.

கபில்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04