அரசாங்கத்திற்கு எதிரான சிலரை அடக்கும் முறைகளில் ஒன்றாகவே பாராளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில்ல கைது செய்யப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசானது இவ்வாறான செயற்பாடுகளை புரிவதன் மூலம் அவர்களின் சிறப்பைக் காட்டிக்கொள்ள முயல்வதாக அவர் ஜப்பானில் இருந்து விசேட கருத்தொன்றை வெளியிட்டார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில்லவை ஜூலை மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு, கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

போலி அனுமதி பத்திரங்களின் மூலம் அவுஸ்திரேலிய நிறுவனமொன்றிற்கு பங்குகளை விற்பனை செய்த குற்றத்தின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.