ஆஸி.யை வீழ்த்திய இலங்கை லெஜன்ட் அணியினர்!

Published By: Vishnu

09 Mar, 2020 | 12:10 PM
image

நேற்று நடைபெற்ற வீதிப் பாதுகாப்பு இருபதுக்கு : 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை லெஜன்ட் அணி அவுஸ்திரேலிய அணியை 7 ஓட்டங்களினால் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

5 அணிகள் கலந்து கொள்ளும் 2020 ஆம் ஆண்டுக்கான வீதிப் பாதுகாப்பு இருபதுக்கு : 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

இதில் நேற்றிரவு இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் பிரட் லீ தலைமையிலான அவுஸ்திரேலிய லெஜன்ட் அணியும் திலகரத்ன தில்ஷான் தலைமையிலான இலங்கை லெஜன்ட் அணிகளும் மோதின.

இப் போட்டியானது நேற்றிரவு 7.00 மணியளவில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களை குவித்தது.

இலங்கை அணி சார்பில் ரோமேஸ் களுவிதாரன 30 ஓட்டங்களையும், சாமர கபுகெதர 20 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

162 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியானது 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 154 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 7 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் நேதன் ரியர்டன் 53 பந்துகளை எதிர்கொண்டு 5 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கலாக 96 ஓட்டங்களை அணி சார்பில் அதிகபடியாக பெற்றார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் திலகரத்ன தில்ஷான் 3 விக்கெட்டுக்களையும், ரங்கன ஹேரத், மெளரூப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், சமிந்த வாஸ் மற்றும் சசித்ர சேனாநாயக்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதேவேளை நாளை மறுதினம்  இடம்பெறவுள்ள ஆட்டத்தில் இந்திய லெஜன்ட் அணியை இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளது. இப் போட்டியானது நாளை இரவு 7.00 மணிக்கு மும்பையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09