யானை அல்லது அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை - ஐ.தே.க. 

Published By: Vishnu

08 Mar, 2020 | 09:08 PM
image

(எம்.மனோசித்ரா)

யானை அல்லது அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதிலும் எவ்வித சட்ட சிக்கலும் கிடையாது எனத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியை விரும்பாதவர்களே சின்னம் தொடர்பில் சட்ட சிக்கல் இருப்பதாக பொய் உரைப்பதாகவும் குறிப்பிட்டார்.

கண்டியில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அன்னம் அல்லது யானை சின்னத்தில் போட்டியிடுவதில் உண்மையில் சிக்கல் காணப்படுமானால் வெறொரு சின்னத்தில் போட்டியிட முடியும். அதில் எந்த முரண்பாடும் இல்லை. வேறு சின்னத்தில் போட்டியிடக் கோருவது சாதாரண கோரிக்கையே ஆகும். ஆனால் இதனை வைத்து முரண்பாடுகளை தோற்றுவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் ஐக்கிய மக்கள் சக்தியை சிதைக்கும் முயற்சிகளே முன்னெடுக்கப்படுகின்றன. 

எவ்வாறிருப்பினும் தற்போது சின்னம் முக்கிய விடயமல்ல. மாறாக ஒற்றுமையே அத்தியாவசியமாகிறது. இதனையே கிராமபுற மக்களும் எதிர்பார்க்கின்றனர். ஐக்கிய தேசிய கட்சிக்குள் அனைவரும் ஒன்றிணைந்து பொதுத் தேர்தலில் அரசாங்கத்தை தோல்வியடைச் செய்ய வேண்டும். இதுவே எமது இலக்காகும். எனவே சின்னத்தை விட இலக்கு முக்கியமானதாகும் என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58