வான் வழித் தாக்குதலில் அல்-ஷபாப்பின் தளபதியொருவர் பலி!

Published By: Vishnu

08 Mar, 2020 | 07:13 PM
image

சோமாலியாவில் இடம்பெற்ற வான் வழித் தாக்குதலில் அல்-ஷபாப் என்ற தீவிரவாத குழுவின் மூத்த தளபதிகளுள் ஒருவரான பஷீர் மொஹமட் கோர்காப் என்பவர் உயிரிழந்துள்ளதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு பஷீர் மொஹமட் கோர்காப் குறித்த தகவல்களை வெளிப்படுத்தியமைக்காக அமெரிக்கா 5 மில்லியன் டொலர்களை வழங்கியது.

சோமாலியாவில் தீவிரவாதிகளை குறி வைத்து அமெரிக்க அடிக்கடி வான்வழித் தாக்குதலை நடத்துகின்றது. இந் நிலையில் இந்த தாக்குதல் குறித்து அமெரிக்கா இதுவரை அறிக்கை எதையும் வெளியிடவில்லை.

எனினும் கோர்காபின் குடும்பத்தினர் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.

சோமாலியமற்றும் அமெரிக்க இராணுவத்தின் கூட்டு நடவடிக்கையைத் தொடர்ந்து பெப்ரவரி 22 ஆம் திகதி தெற்கு சோமாலிய நகரமான சாகோவில் கோர்காப் கொல்லப்பட்டதாக சோமாலிய அரசு வானொலி சேவைகள் சுட்டிக்காட்டியிருந்தது.

எனினும் சர்வதேச ஊடகங்கள் அவரின் உயிரிழப்பு தொடர்பில் தற்போதே செய்திகளை வெளியிட்டுள்ளதுடன், அந்த தாமதத்திற்கான காரணத்தையும் வெளியிடவில்லை.

ஏனைய தலைவர்களுடனான கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து கோர்காப் அல்-ஷபாபிலிருந்து பிரிந்துவிட்டதாக கடந்த மாதம் சோமாலிய செய்தி ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும் வெளியிட்டிருந்தன.

அல்-ஷபாப் அல்-கொய்தாவுடன் தொடர்புபட்டுள்ளதுடன் தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்துகிறது.

இது சோமாலியாவுக்கு அண்டை நாடான கென்யாவிலும் குண்டுவெடிப்பு சம்பவங்களை நடத்தியுள்ளது, மேலும் குறித்த பகுதியில் மிகவும் ஆபத்தான குழுவாகவும் இது கருதப்படுகிறது.

கடந்த மாதம், அல்-ஷபாப் கென்யா மற்றும் அமெரிக்கப் படைகள் பயன்படுத்திய கென்யாவில் ஒரு தளத்தை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் மூவர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்கத்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52