அன்பழகன் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

Published By: Daya

07 Mar, 2020 | 04:04 PM
image

தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க. அன்பழகன் நேற்றிரவு காலமானார் அவருக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

தி.மு.க.வின் முன்னணி தலைவர்களில் மூத்த தலைவராக வலம்வந்தவரும், தி.மு.க.வின் பொதுச் செயலாளரருமான இருந்தவர் பேராசிரியர் அன்பழகன். 

98 வயதான  பேராசிரியர் அன்பழகன் முதுமையின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஓய்வில் இருந்தார். அவருக்கு வீட்டிலேயே உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், கடந்த மாதம் 24ஆம் திகதியன்று அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில் , அன்பழகன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஒரு மணியளவில் வைத்தியசாலையில் காலமானார்

அன்பழகன் காலமான  தகவல் அறிந்ததும், தி.மு.க.வின் தலைவரான மு. க. ஸ்டாலின் உடனடியாக வைத்தியசாலைக்கு விரைந்து சென்று, அஞ்சலி செலுத்தினார். அவருடன் முன்னணி தலைவர்கள் உடனிருந்தனர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.

அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் ராமகிருஷ்ணன், சுபவீரபாண்டியன், மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், வைரமுத்து உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அன்பழகனின் இறுதி ஊர்வலம் அவரது வீட்டிலிருந்து இன்று மாலை 4 மணியளவில் தகனம் செய்யப்படும். 

அன்பழகனின் மறைவையொட்டி தி.மு.க. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. அக்கட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வாரத்திற்கு இரத்து செய்யப்படுவதாக அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47