1 மில்லியன் ரூபா பெறுமதியான காப்புறுதி: ஊடகவியலாளர்களுக்கோர் முக்கியத் தகவல்..!

Published By: J.G.Stephan

07 Mar, 2020 | 02:29 PM
image

ஊடகவியலாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு மன்றக் கல்லூரியில் இது தொடர்பான நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.

2020 அரிமஹ அமைப்பு ஆசிய ஊடக மற்றும் கலாச்சார சங்கம் பெயார் வ்ஸ்ட் காப்புறுதி நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து இதனை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடதக்கது. இக்காப்புறுதி முறையின் கீழ் ஊடகவியலாளர்களுக்காக வருடத்தில் 985 ரூபா செலுத்த வேண்டும். இதன் மூலம் ஒரு மில்லின் ரூபா பெறுமதியான காப்புறுதி கிடைக்கின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைய இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கட்டிருப்பதாக  2020 அரிமஹ அமைப்பின் தலைவர் கனிஸ்க டி சில்வா இந்த நிகழ்வின் போது தெரிவித்தார்.

இதில் உரையாற்றிய ஆசிய ஊடக மற்றும் கலாச்சார சங்க தலைவரும் ஊடகவியலாளருமான உபுல் ஜனக ஜயசிங்க பல்வேறு தடைகளுக்கு மத்தியில் இதனை வெற்றிகொள்ள தமது சங்கத்தினால் முடிந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தின் ஊடகவியலாளர் அடையாள அட்டையை கொண்டுள்ளவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

 077 3945325 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்புகொண்டு இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08