மகளிர் தினத்தை துக்கத்தினமாக அனுஷ்டித்து முல்லையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் !

07 Mar, 2020 | 12:20 PM
image

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 08-03-2020 அன்று மகளிர் தினத்தை துக்கத்தினமாக அனுஷ்டித்து  சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதோடு அன்றைய நாளில் முல்லையில் பூரண கடையடைப்பு மேற்கொள்ளுமாறு கோரிக்கை  விடுத்துள்ளன. 

இந்நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொள்ளும் மாபெரும்  கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரையும் பங்கு கொள்ளுமாறும்  குறித்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழர் மரபுரிமை  பேரவை தனது பூரண ஆதரவை வழங்குவதாகவும் தமிழர் மரபுரிமை  பேரவையின்  இணைத் தலைவர்களில் ஒருவரான விஜயகுமார் நவநீதன் தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற போராட்டம் நேற்று  (06-03-2020) 1095 ஆவது நாளாக இடம்பெற்ற நிலையில் எதிர்வரும் எட்டாம் திகதி முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொள்ள இருக்கின்றனர்.

இவர்களுடைய இந்த போராட்டத்திற்கு தங்களுடைய ஆதரவினை வழங்குவதாக தமிழர் மரபுரிமை பேரவைத் தலைவர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அவர்  மேலும் கருத்து தெரிவித்ததாவது,

உறவினர்கள் , நண்பர்கள் சாட்சியாக முள்ளிவாய்க்காலிலும், வட்டுவாகலிலும்,  ஓமந்தையிலும்  தங்கள் உறவுகளை இராணுவத்திடம் கையளித்த உறவுகள் இன்றும்  அவர்களை தேடி வருவது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் உச்சம் தொட்ட நிகழ்வு.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்திற்கு முன்னர் பல ஆண்டுகளாக ஆங்காங்கே திட்டமிட்ட முறையில் எம் உறவுகள்  காணாமல் ஆக்கப்பட்டார்கள்  இது முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது உச்சம் பெற்றது. இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உடைய உறவுகள் கடந்த 3 ஆண்டுகளாக தங்களுடைய நீதியான கோரிக்கைக்கு இலங்கை அரசாங்கமும்  சர்வதேசமும் செவிசாய்க்க வேண்டும் என்ற அடிப்படையில் தொடர்ச்சியான ஜனநாயக போராட்டங்களை நடாத்தி வந்திருக்கிறார்கள். 

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தை பொறுத்தவரையிலே  நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறோம்,  சமாதானம் பேசுகின்றோம், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தேடிக்கண்டுபிடிக்க அலுவலகம் அமைக்கிறோம் என்று  எங்களுடைய மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றி வந்த சூழ்நிலையிலே இவை எல்லாவற்றிற்கும் ஒரு படி மேல் சென்று புதிதாக பதவியேற்றுள்ள அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோர் உடைய பிரச்சனையை முற்றாக நிராகரிப்பதோடு  அவ்வாறானஎந்த  சம்பவங்களும்  இடம்பெறவில்லை என்று கூறியது மாத்திரமல்லாமல் அவ்வாறான எவரும்  உயிரோடு இல்லை என்று பொறுப்பற்ற முறையில் பதில் அளித்திருக்கிறது மட்டுமில்லாமல் ஐநாவின் உடைய 40/1 தீர்மானத்தில் இருந்தும் தான்தோன்றித்தனமாக விலகி இருக்கின்றது.

இந்த சூழ்நிலையில் தான் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உடைய உறவுகள் சர்வதேசத்தினுடைய மனச்சாட்சியைத் சீண்டவும்  ஐநாவினுடைய  கதவுகளை மீண்டும்  ஒருமுறை உரக்க தட்டுவதற்க்காக ஒரு   மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை முல்லைத்தீவு நகரில் எதிர்வரும் எட்டாம் திகதி மகளிர் தினத்தன்று ஒழுங்கு செய்து இருக்கிறார்கள்

முல்லைத்தீவு மக்கள் கடந்த காலங்களிலே எங்களுடைய தேசியம் சார்  பிரச்சனைகளுக்காக இடம்பெற்ற அத்தனை சாத்வீகப் போராட்டங்களிலும்  ஜனநாயக போராட்டங்களிலும் மிகவும் தன்  எழுச்சியோடு பங்குபற்றிய மக்கள் என்ற அடிப்படையிலேயே இந்த முல்லை மக்களோடு இணைந்து தமிழர் தாயகமெங்கும் வாழ்கின்ற தமிழ் இன உணர்வாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடைய உறவினர்களால் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கின்ற இந்த ஜனநாயக கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தங்களுடைய பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று தமிழர் மரபுரிமை  பேரவையினராகிய  நாங்கள் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழர் மரபுரிமை  பேரவை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உடைய சங்கங்களுக்கு  பக்கபலமாக இருந்து அவர்களுக்கு பூரண அனுசரணையை வழங்கும் எனவும்  எமது  மக்கள் அந்த சங்கத்தோடு மிகவும் ஆத்மாத்தமான  ரீதியிலே  நீதிக்கு உலகை தலைசாய்க்க வைக்கும் வகையில் அணிதிரள வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44