அமெரிக்கா தனது படைகளை ஆப்கானில் இருந்து குறைத்துக்கொள்ளும் : ஆப்கான் தன்னை பாதுகாத்துக் கொள்ளவெண்டுமெனவும் டிரம்ப் தெரிவிப்பு!

Published By: R. Kalaichelvan

07 Mar, 2020 | 12:07 PM
image

அமெரிக்கா மற்றும் தலீபான்களுக்கிடையிலான சமாதான ஒப்பந்தைத்தை அடுத்து ஆப்கானில் உள்ள அனைத்து அமெரிக்க இராணுவத்தினரும் 14 நாட்களுக்குள் ஆப்கானை விட்டு வெளியேறுவார்கள் என தெரிவித்தார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்.

நேற்றைய தினம் அமெரிக்க வெள்ளைமாளிகையில் இடம்பெற்ற காலந்துரையாடலை அடுத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வாரம் கட்டாரின் தலைநகர் டோஹாவில் பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் அமெரிக்க அதிகாரிகளும் தலீபான்களின் பிரதிநிதிகளும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து ஆப்கானிய அராசங்கத்தை தலீபான்கள் முறியடிக்கக் கூடுமெனவும் தெரிவித்த டிரம்ப்,  தங்களின் நாட்டினை ஆப்கான் அரசு பாதுகாத்துக் கொள்ளவேண்டுமெனவும் குறிப்பிபட்டார்.

அத்தோடு நீங்கள் ஒருவரின் கையை பிடித்துக்கொண்டே பயணிக்க முடியாது , அதேபோல் நீங்கள் நாட்டினை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமெனவும் டிரம்ப் வெள்ளமாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்டார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலீபான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இடம்பெற்று வரும் மிக நீண்ட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்கமாக கொண்டு இரு தரப்புகளுக்குமிடையே ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கட்டாரின் தலைநகர் டோஹாவில் பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் அமெரிக்க அதிகாரிகளும் தலிபான் பிரதிநிதிகளும் இந்த ஒப்பந்தத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கையெழுத்திட்டுள்ளனர்.

பாகிஸ்தான், கட்டார், துருக்கி, இந்தியா, இந்தோனேசியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் மூலம் ஆப்கானிஸ்தாலிருந்து  அமெரிக்கா தனது படைகளை படிப்படியாக திரும்பப் பெற வழி வகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Image : Al Jazeera

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52