மே.இ.தீவுகளுக்கு எதிராக 155 ஓட்டங்களை குவித்த இலங்கை!

Published By: Vishnu

06 Mar, 2020 | 08:45 PM
image

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு : 20 சர்வதேச கிரக்கெட் போட்டியில் இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 155 ஓட்டங்களை குவித்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கிரான் பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியானது இலங்கை அணியுடன் 5 ஒருநாள் மற்றும் 2 இருபதுக்கு : 20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை இலங்கை அணியானது முழுமையாக கைப்பற்றி மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியை வைட் வோஷ் செய்திருந்தது.

இதன் பின்னர் ஆரம்பமான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியானது 25 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

இந் நிலையில் தொடரின் இறுதியும் இரண்டாவதுமான போட்டியானது இன்றைய தினம் கண்டி பல்லேகல மைதானத்தில் இன்றிரவு 7.00 மணிக்கு ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணியானது களத்தடுப்பை தேர்வு செய்ய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து ஓட்டங்களை குவித்தது.

இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா 15 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 09 ஓட்டங்களையும், செஹான் ஜயசூரிய 16 ஓட்டங்களையும், குசல் மெண்டீஸ் 11 ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்தியூஸ் 23 ஓட்டங்களையும், வர்னிந்து ஹசரங்க 08 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க, தசூன் சானக்க 31 ஓட்டங்களுடனும், திசர பெரேரா 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் பேபியன் அலன் 02 விக்கெட்டுக்களையும், ஷெல்டன் கோர்ட்ரல், உசேன் தோமஷ் மற்றும் பிராவோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35