குடும்ப ஆட்சியை ஒழிக்கும் மாற்றமே ஐக்கிய மக்கள் சக்தி  கூட்டணி : சம்பிக்க  ரணவக்க  

Published By: R. Kalaichelvan

06 Mar, 2020 | 01:18 PM
image

(ஆர்.விதுஷா)

அரசியல் பழிவாங்கல்களுக்குள்ளாவதிலிருந்து மீள்வதற்கும், ராஜபக்ஷ தரப்பினரின் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும் கொண்டுவரப்பட்ட மாற்றத்தின் அணியாகவே  ஐக்கிய மக்கள் சக்த கூட்டணி அமைந்துள்ளதாக தெரிவித்த பாட்டலி  சம்பிக்க ரணவக்க பொதுத்தேர்தலின் போது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

கம்பஹா மாவட்டத்தில் நேற்று மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது  இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது  ,

ஜனாதிபதி தேர்தலின் போது நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதன் காரணமாக எமக்கு வாக்களித்த அனைவரும் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக நேரிட்டுள்ளது. எதிர்காலத்தில் எவ்வாறு இந்நிலையிலிருந்து மீள்வது என்பது தொடர்பில்  சிந்திக்க வேண்டியது அவசியமானதாகும்.  

அதிலிருந்து மீள்வதாயின் மாற்றம் ஏற்பட வேண்டும். அத்தகைய  புதிய மாற்றத்திற்காகவே ஐக்கிய மக்கள் சக்தியை  உருவாக்கியுள்ளோம்.  ஐ.தே.கவை பிளவு படுத்த இதை  உருவாக்கவில்லை. புதிய தலைமைத்துவத்தில் புதிய பாதையில் பயணிப்பதை நோக்காக கொண்டு உருவாக்கப்பட்டதே இந்த கூட்டணியாகும்.

அடிப்படை வாத நடவடிக்கைகள் நாட்டினுள்  வலுவடைந்துள்ளதாகவும்  ,அதனை முறியடிப்பதாகவும் கூறிக்கொண்டு  ஆட்சிக்கு வந்தனர்.

ஆயினும் அதற்கு  உரிய எந்த  நடவடிக்கைகளையும்  இந்த  அரசாங்கம்  மேற்கொள்ளவில்லை. மாறாக நாம் அரச  ஊழியர்களுக்கு வழங்கிய  சம்பள  உயர்வு  மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்பட்ட  ஓய்வூதிய உயர்வு என்பனவற்றை இந்த அரசாங்கம் இரத்து செய்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கம்  ஆட்சிக்கு  வந்ததை  அடுத்து எரிபொருள் விலையை  குறைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்.  நட்டத்தில்  இயங்கிய  மின்சாரசபையை  இலாப நிலைக்கு உயர்த்தினோம்.

பல்வேறு சலுகைளை நாட்டு மக்களுக்கு வழங்கியிருந்தோம். உலக சந்தையில்  எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. அதன் பயனை  நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுக்க  முடியாத  அரசாங்கம் செல்வந்தர்களுக்கும் , கசினோ சூதாட்டகார்களுக்குமான  வரிச்சலுகையையே  வழங்கியுள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38