காணாமல் போனோர் விடயத்தை மறந்து செயற்பட வேண்டும் என்கிறார் ஜனாதிபதி

Published By: Digital Desk 3

06 Mar, 2020 | 11:49 AM
image

(நமது நிருபர்)

காணா­மல்­போனோர் தொடர்­பான விட­யத்தை  மறந்து  செயற்­ப­ட­வேண்டும்.   காணாமல்  போய்­விட்­டனர்., காணாமல் போய்­விட்­டனர் எனக் கூறு­வதில் பய­னில்லை.   இரா­ணு­வத்­திலும் காணா­மல்­போ­யுள்­ளனர். 

காணா­மல்­போனோர் தொடர்பில் விசா­ரணை நடத்தி அது உறு­தி­யானால் மர­ணச்­சான்­றி­தழ்­களை வழங்­கு­வ­தற்கு நாம் தயா­ராக உள்ளோம் என்று ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

பொரு­ளா­தாரப் பிரச்­சினை தான் அர­சியல்  பிரச்­சி­னைக்கு முக்­கிய கார­ணி­யாக உள்­ளது. வடக்கு கிழக்கில் மக்­களின் பொரு­ளா­தார பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­பதன் மூலம் சகல பிரச்­சி­னை­க­ளையும் தீர்க்க முடியும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஊடக நிறு­வ­னங்­களின் பிர­தா­னிகள் மற்றும் தேசிய பத்­தி­ரி­கை­களின் ஆசி­ரி­யர்­களை ஜனா­தி­பதி நேற்று சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார். இந்த சந்­திப்­பின்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது,

 கேள்வி:  பாரா­ளு­மன்றத் தேர்தல் திகதி   அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.  பாரா­ளு­று­மன்றத் தேர்­தலில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை   வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்று நீங்கள்   கோரி­வ­ரு­கின்­றீர்கள்.  இதற்­கான பிர­தான நோக்கம் என்ன?

பதில்: அர­சி­ய­ல­மைப்பில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பாத­க­மான நிலை­மையும் மாற்­றி­ய­மைக்­கப்­ப­ட­வேண்டும். 19 ஆவது திருத்­தத்தின்  மூலம் கொண்­டு­வ­ரப்­பட்ட  மாற்றம்   நாட்டை நிர்­வ­கிப்­ப­தற்கு தடை­களை   ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.  நிறை­வேற்று  அதி­காரம்  பாரா­ளு­மன்ற  அதி­கா­ரத்­திற்­கி­டையில்  முரண்­பா­டு­களை   ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.  ஜனா­தி­பதி முறை­மையின் மீது  எதிர்­பார்ப்பு வைத்தே  என்னை மக்கள்  தெரி­வு­செய்­துள்­ளனர்.  எனவே நிறை­வேற்று அதி­கா­ரத்­திற்கு தடைகள் இருக்­கு­மானால் அவற்றை   நீக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.  

நிறை­வேற்று அதி­காரம், நீதித்­துறை,   பாரா­ளு­மன்றம்  ஆகிய  துறைகள்   இணக்­கப்­பாட்டின் அடிப்­ப­டையில் செயற்­ப­ட­வேண்டும். ஆனால் 19ஆவது திருத்த சட்­டத்தின் கீழ்   இந்த நிலைமை மாற்­ற­ம­டைந்­துள்­ளது. எனவே இதனை  மாற்­றி­ய­மைக்­க­வேண்டும்.   இத்­த­கைய மாற்­றங்­க­ளுக்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பெறப்­ப­ட­வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­த­தாகும். 

கேள்வி: 19 ஆவது திருத்த சட்­டத்தின் கீழேயே  சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.  அதனை நீக்­கு­வது  சரி­யா­னதா?

பதில்:  சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள்  என்றால் உண்­மை­யி­லேயே  சுயா­தீ­ன­மாக இருக்­க­வேண்டும். ஆனால்  இங்கு  நிலைமை  அவ்­வா­றில்லை.  ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது  தேர்தல்  ஆணைக்­குழு  உறுப்­பினர் ஒருவர்  தனிப்­பட்ட கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருந்தார்.   முக்­கிய பத­விக்கு  வந்த பின்னர்  தனிப்­பட்ட  கருத்­துக்­களை  தவிர்த்­தி­ருக்­க­வேண்டும்.  இவ்­வாறு  சுயா­தீ­ன­மில்­லாத  நட­வ­டிக்­கை­களால்  பய­னில்லை.  பொலிஸ் ஆணைக்­குழு  இருக்­கின்­றது. இதன் தேவை என்ன?  பொலிஸ்மா அதிபர்  சுயா­தீ­ன­மாக  இல்லை  என்­ப­த­னாலா  இந்த ஆணைக்­குழு அமைக்­கப்­ப­டு­கின்­றது. 

பொலிஸ்மா அதி­ப­ராக தெரி­வு­செய்­யப்­ப­டுவர் 24 , 25  வரு­டங்கள் கட­மை­யாற்­றியே  அந்தப் பத­விக்கு வரு­கின்றார். அவரை  நம்­ப­மு­டி­யா­விட்டால்   பொலிஸ்  ஆணைக்­கு­ழுவின் சுயா­தீ­னத்தை எப்­படி நம்­ப­மு­டியும்.   சரி­யான விளக்­க­மின்றி இத்­த­கைய செயற்­பா­டுகள்  மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. 

கேள்வி: பட்­ட­தா­ரி­க­ளுக்­கான  நிய­மனம் வழங்­கப்­பட்டு  அவர்­க­ளது பயிற்­சிகள்   நிறுத்­தப்­பட்­டுள்­ளன.   தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின்  தலை­வரின்   உத்­த­ரவை அடுத்து  இந்தப் பயிற்சி நட­வ­டிக்கை நிறுத்­தப்­பட்­டுள்­ளது. பெரு­ம­ள­வா­ன­வர்கள் தாம் செய்த தொழில்­களை விட்டு  இந்த நிய­ம­னங்­களை பெற்­றுள்­ளனர்.  அவர்கள்  தமக்கு  மீண்டும்  நிய­ம­னங்கள் கிடைக்­குமா என்று ஏங்­கு­கின்­றனர்.  இந்த நிய­ம­னத்தில் அர­சியல் செயற்­பாடு உள்­ளதா? மீண்டும் நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­டுமா?

பதில்:  பட்­ட­தா­ரி­க­ளுக்­கான  நிய­ம­னங்கள்  வழங்­கப்­பட்­டுள்­ளன. தகைமை அடிப்­ப­டையில் அவர்கள்  தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ளனர். கட்­சி­பே­த­மின்­றியே நிய­ம­னங்கள் வழங்­கப்­பட்­டன.  இந்த நிலையில்  அவர்­க­ளுக்­கான  பயிற்­சி­களை  இடை­நி­றுத்­து­மாறு   தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர்  உத்­த­ர­விட்­டது  சரியா என்­பது தொடர்பில் ஆரா­ய­வேண்­டி­யுள்­ளது.  இந்த விடயம் தொடர்பில்   தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ருக்கு கடிதம் அனுப்­ப­வுள்ளோம்.   பயிற்­சியை இடை­நி­றுத்­து­வதில் பய­னில்லை.    தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னு­தாக்கல் இன்­னமும் இடம்­பெ­ற­வில்லை.   

கேள்வி:  இந்த நிய­ம­னங்கள்  மீண்டும்  வழங்­கப்­ப­டுமா? 

பதில்: பச்சை , மஞ்சள், சிவப்பு, வரும் அதன் பின்னர்  பச்சை வரும். 

கேள்வி:  ஐ.நா. மனித உரிமை பேர­வையின்  பிரே­ர­ணைக்­கான  அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து  அர­சாங்கம்   வெளி­யே­றி­யுள்­ளது. உள்­ளகப் பொறி­மு­றையின் கீழ் விசா­ரணை  இடம்­பெறும் என்று அர­சாங்கம்  அறி­வித்­துள்­ளது. ஆனால்  வடக்கு, கிழக்கு மக்­களும்   அவர்­களின் பிர­தி­நி­தி­க­ளான தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­னரும் உள்­ளக விசா­ர­ணை­களில்  நம்­பிக்­கை­யில்லை  என்று    கூறி­யுள்­ளனர்.  இது குறித்து உங்­களின் நிலைப்­பாடு என்ன?

பதில்: மக்­களின்  வாழ்­வா­தார நிலையை உயர்த்­து­வதன் மூலம்தான் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைக் காண முடியும். அர­சி­யல்­வா­திகள்   அர­சி­ய­லுக்­காக   பல்­வேறு கருத்­துக்­களை தெரி­விப்பர்.  மக்­களின் வாழ்க்கை முறையின் அபி­வி­ருத்­தியின்  ஊடா­கவே தீர்வைக் காணலாம். அன்று உமா மகேஸ்­வரன் பொரு­ளா­தார பிரச்­சி­னை­களின் அடிப்­ப­டை­யி­லேயே  போராட்­டத்தை ஆரம்­பித்தார்.   பொரு­ளா­தார ரீதி­யாக மக்­க­ளுக்கு பலன்­கி­டைக்­க­வேண்டும். 

சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனை­வரும் இந்த நாட்டின்  பிர­ஜைகள் என்­ற­வ­கையில்   கல்வி, பல்­க­லைக்­க­ழக  கல்வி,  வேலை­வாய்ப்பு, சுகா­தார வச­திகள், உட்­பட    பல்­வேறு வச­திகள் மக்­க­ளுக்கு கிடைக்­கு­மானால்   பிரச்­சி­னைகள்   இருக்­காது.  இத்­த­கைய  வச­தி­களை வழங்­கு­வ­தற்கு  நட­வ­டிக்கை  எடுக்­க­வேண்டும். 

கேள்வி: பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியின் மூலம்  தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு  தீர்­வு­காண முடியும் என்று  கூறு­கின்­றீர்கள் அன்று அமிர்­த­லிங்கம், செல்­வ­நா­யகம் ஆகியோர் அர­சியல் ரீதி­யாக  தீர்­வு­கா­ணப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சி­யத்­தையே  வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர். 

பதில்:  அர­சி­யல்­வா­திகள்  அவ்­வா­றுதான் கூறு­வார்கள்.   அதில் உண்மை இருக்கும் என்று நான் நம்­ப­வில்லை.  1971 ஆம் ஆண்டு தெற்கில்   போராட்டம்  ஆரம்­பித்­தது.   இங்கு பொரு­ளா­தார வேறு­பாட்டின் கார­ண­மா­கவே இத்­த­கைய நிலை ஏற்­பட்­டது.   யாழ்ப்­பா­ணத்தில் மட்­டு­மல்ல  தெற்­கிலும்   ஏனைய பகு­தி­க­ளிலும்  அனை­வ­ருக்கும்  பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன.  

தமிழ் வர்த்­த­கர்கள்  பெரி­ய­ளவில் வியா­பா­ரங்­களை மேற்­கொள்­கின்­றனர். இந்த நிலையில்   சிங்­க­ள­வர்கள்  முருங்கை இலை உண்ணும் நிலைமை இன்னும் காணப்­ப­டு­கின்­றது.  இவ்­வாறு சமத்­துவம் இன்மை    இங்கும் நில­வு­கின்­றது.  பொரு­ளா­தார ரீதியில் சம­மாக  வாழ முடி­யு­மான நிலை உரு­வா­க­வேண்டும்.பிரித்­து­வைத்து செயற்­ப­டு­வ­தனால் எந்தப் பயனும் ஏற்­ப­டாது.  பொரு­ளா­தாரப் பிரச்­சினை தான் அர­சியல்  பிரச்­சி­னைக்கு முக்­கிய கார­ணி­யாக உள்­ளது.  

கேள்வி:  காணா­மல்­போனோர் பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ணு­மாறு  வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது. இந்த விடயம் தொடர்பில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என்ன?

பதில்:  காணா­மல்­போ­ன­வர்கள் தொடர்பில்  உரிய விசா­ர­ணைகள்   நடத்­தப்­பட்­டுள்­ளன.     இரா­ணு­வத்­திலும்   4000 பேர் வரையில் காணா­மல்­போ­யுள்­ளனர்.  சகல பிரி­வு­க­ளிலும்  இவ்­வா­றான நிலை  காணப்­ப­டு­கின்­றது.  யுத்­தத்தில்  சட­லங்கள் மீட்­கப்­ப­டா­த­போது அவர்கள்  காணா­மல்­போ­ன­வர்­க­ளா­கவே கரு­தப்­ப­டுவர்.  

இரண்­டா­வது ஈழப்­போ­ரின்­போது யாழ்ப்­பாணம் கோட்­டையில்  நானும்   சரத் பொன்­சே­காவும் கட­மை­யாற்­றி­யி­ருந்தோம். அப்­போது    கோட்­டை­யி­லி­ருந்து முன்­னே­றிய   400 படை­யினர் வரையில் கொல்­லப்­பட்­டனர்.  அவர்­களின்  சட­லங்­களை  எம்மால் மீட்க முடி­ய­வில்லை.   அவ்­வா­றா­ன­வர்­களை  உற­வி­னர்கள் காணா­மல்­போ­ன­வர்­க­ளா­கவே கரு­துவர். 

யுத்­த­பூ­மியில் இவ்­வா­றான செயற்­பா­டுகள் இடம்­பெறும்.   இத்­த­கைய நிலை­யினை வேறு­வி­த­மாக மாற்­று­வ­தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது. சில தனிப்­பட்ட சம்­ப­வங்கள் இடம்­பெற்­றி­ருக்­கலாம்.  ஆனால் அவற்றை பொதுப்­ப­டை­யாக மாற்­று­வ­தற்கு முயற்­சிக்­கின்­றனர்.   கொலைச்­சம்­ப­வ­மொன்று இடம்­பெற்றால்  இலங்­கையை சேர்ந்த அனை­வரும் கொலை­கா­ரர்கள் என்ற பானியில்  கருத்­துக்கள் கூறப்­ப­டு­கின்­றன.  

இரா­ணு­வத்தில்  4000 பேர் காணா­மல்­போ­யுள்­ளனர். யுத்­தத்­தின்­போது   சட­லங்கள்   மீட்­கப்­ப­டா­விட்டால் இத்­த­கைய நிலை ஏற்­படும். 2006ஆம் ஆண்டு  முக­மா­லையில் 129 இரா­ணு­வத்­தினர் பலி­யா­கினர்  சட­லங்­களை மீட்­க­மு­டி­ய­வில்லை. ஒரு மாதத்­திற்கு பின்னர்  சர்­வ­தேச செஞ்­சி­லுவைச் சங்கம்  சட­லங்கை ஒப்­ப­டைக்க முன்­வந்­தது. ஆனால் அவற்றை அடை­யாளம் காண முடி­யா­மை­யினால் நாம் அதனை பொறுப்­பேற்­க­வில்லை.  

புலி­களின் விட­யத்­திலும் இவ்­வா­றுதான்  இருக்­கின்­றது.  யுத்­தத்தில்  ஈடு­பட்­ட­போது  சட­லங்கள் கிடைக்­கா­த­வர்கள் தமது உற­வு­களை  காண­வில்லை என்­கி­றார்கள் அதற்கு யார் பொறுப்­பு­கூ­று­வது. 

கேள்வி: யுத்­தத்­தின்­போது  கொல்­லப்­பட்­ட­வர்­களை விட  இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்­த­வர்கள்  மற்றும்  ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­வர்கள் காணாமல் போயுள்­ள­தா­கவே உற­வி­னர்கள்  குறிப்­பி­டு­கின்­றனர்.  

பதில்: அப்­ப­டி­யல்ல. யுத்­தத்­தின்­போது  காணா­மல்­போ­ன­வர்கள் தொடர்பில் யுனிசெப் அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டி­ருந்­தது.  சிறு­வர்கள் மற்றும் சிறு­மி­யர்கள் தொடர்பில்   இந்த அறிக்கை வெளி­யா­கி­யி­ருந்­தது.  காணா­மல்­போ­னவர் தொடர்பில் 2600 முறைப்­பா­டுகள்  கிடைத்­தி­ருந்­த­தா­கவும்   இதில்  8 பேரை மட்­டுமே  இரா­ணுவம்   அழைத்து சென்­ற­தா­கவும்  70 வீத­மா­னோ­ருக்கு   என்ன நடந்­தது என்­பது  தெரி­யாது என்றும் ஏனை­ய­வர்­களை விடு­த­லைப்­பு­லி­களே அழைத்து சென்­ற­தா­கவும் முறை­யி­டப்­பட்­டி­ருந்­தது.  

கேள்வி: காணா­மல்­போனோர்  விவ­காரம் தொடர்பில்   மக்கள்  அர­சாங்­கத்­திடம்  நியா­யத்தை கோரி நிற்­கின்­றனர்.   ஆனால்   ஆட்சி  அமைக்­கப்­பட்டு  100 நாட்கள் ஆகியும் இந்த நியாயம் பெறப்­ப­ட­வில்லை.  இது குறித்து உங்கள் நிலைப்­பாடு என்ன?

பதில்: ஜனா­தி­ப­தி­யாகி 100 நாட்­க­ளுக்குள்  கொரோனா உட்­பட பல்­வேறு பிரச்­சி­னைகள்  வந்­து­விட்­டன. 

கேள்வி: அப்­ப­டி­யானால் காணா­மல்­போனோர் பிரச்­சி­னைக்கு தீர்­வுதான் என்ன?

பதில்:  அதை­யெல்லாம் மறந்து  செயற்­ப­ட­வேண்டும்.   காணாமல்  போய்­விட்­டனர்., காணாமல் போய்­விட்­டனர் எனக் கூறு­வதில் பய­னில்லை.   இரா­ணு­வத்­திலும் காணா­மல்­போ­யுள்­ளனர். அவர்­க­ளது  உற­வி­னர்கள் பலர்  தமது    பிள்ளை தொடர்பில் சாத்­திரம் பார்த்­தா­கவும்  அவர் உயி­ருடன் இருப்­ப­தா­கவும் என்­னிடம் தெரி­விப்­பார்கள்.  ஆனால்  உண்மை நிலை அவ்­வா­றா­ன­தல்ல.  இந்த விடயம் தொடர்பில் ஜெனி­வாக்கு செல்­வ­தனால் பய­னில்லை.  

காணா­மல்­போனோர் தொடர்பில் விசா­ரணை நடத்தி அது உறு­தி­யானால் மர­ணச்­சான்­றி­தழ்­களை வழங்­கு­வ­தற்கு நாம் தயா­ராக உள்ளோம்.  முன்­னைய எமது ஆட்­சியில் காணா­மல்­போனோர் தொடர்பில் தர­வு­களை பெற்று நட­வ­டிக்கை எடுக்க இருந்தோம்.  காணா­மல்­போ­னவர் என்று தெரி­விக்­கப்­பட்­டவர் கன­டாவில் இருப்­பதும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருந்­தது.  இந்த நிலையில் தான் ஆட்­சி­மாற்றம் ஏற்­பட்­டி­ருந்­தது.   இந்த நிலையில் தற்­போது   இவ்­வி­டயம் குறித்து ஆராய்ந்து மர­ணச்­சான்­றி­தழ்­களை வழங்­கு­வ­தற்கு நாம்  தயா­ராக உள்ளோம்.  ஒருவர் காணா­மல்­போனோர் நான்கு வரு­டங்­களின் பின்னர் இத்­த­கைய சான்­றி­தழ்­களை வழங்க முடியும்.  

கேள்வி:  சிறி­லங்கா   பொது­ஜன முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற தேர்தல்   பிர­சா­ரக்­கூட்­டங்­களில்   நீங்கள்  பங்­கேற்­பீர்­களா?

பதில்:  ஆம்.  அந்த  கட்­சியின் சார்­பி­லேயே நான் ஜனா­தி­ப­தி­யாக  தெரி­வு­செய்­யப்­பட்டேன். 

கேள்வி:  உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­குதல் மற்றும்   மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்பில்   உரிய விசா­ரணை நடத்­தப்­பட்டு குற்­ற­வா­ளிகள்  தண்­டிக்­கப்­ப­டு­வார்கள் என்று   வாக்­கு­றுதி அளித்­தி­ருந்­தீர்கள். ஆனால் அந்த வாக்­கு­று­திகள் இன்­னமும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. 

பதில் :   கடந்த ஆட்­சியில்  எதிர்க்­கட்­சி­யி­னரே அர­சியல் பழி­வாங்­கல்­க­ளுக்கு உட்­ப­டுத்தும் வகையில்  செயற்­பா­டுகள் இடம்­பெற்­றன.  ஆனால் தற்­போது  அவ்­வா­றான நிலை இல்லை.  உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­குழு இருக்­கின்­றது. அந்த ஆணைக்­குழு மீது கர்­தினால் மெல்கம் ரஞ்­சித்தும்  நம்­பிக்கை தெரி­வித்­தி­ருந்தார்.  

நாட்டில்  பாது­காப்பு விட­யத்­திலும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன.  

கேள்வி: அமெ­ரிக்­க­வு­ட­னான எம்.சி.சி. ஒப்­பந்­தத்­தி­லி­ருந்து வில­கு­வ­தாக அர­சாங்கம்    அறி­வித்­துள்­ளது.   தேர்­த­லுக்குப் பின்னர்  இந்த ஒப்­பந்தம்   கைச்­சாத்­தி­டப்­படும் என்று எதிர்­வு­கூ­றப்­ப­டு­கின்­றது. இதன் உண்­மைத்­தன்மை என்ன?

பதில்: எதிர்­காலம் தொடர்­பான ஞானம்  என்­னிடம் இல்லை.   

கேள்வி: நாட்டின் பொரு­ளா­தார முன்­னேற்­றத்­திற்கு கொரோ­னா­வினால் பாதகம் ஏற்­ப­டுமா?

பதில்: பொரு­ளா­தா­ரத்தை வளப்­ப­டுத்­து­வ­தற்கு  நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யது முக்­கியம்.   கொரோ­னா­வினால் சர்­வ­தேச ரீதியில் பாதிப்பு ஏற்­படும்.  

கேள்வி: வரிச்­ச­லு­கைகள் வழங்­கப்­பட்­டதன் மூலம் பொரு­ளா­தா­ரத்­திற்கு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றதே?

பதில்: பொரு­ளா­தார முகா­மைத்­துவம் தொடர்பில்  பிரச்­சி­னை­யில்லை.   வரி குறைப்­பினால்  வியா­பா­ரங்கள் முன்­னேற்­ற­ம­டைந்­துள்­ளன. அவ்­வாறு  வரி­கு­றைப்பு செய்­யா­விட்டால் பல   வர்த்­தக நட­வ­டிக்­கைகள்  மூட­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டி­ருக்கும்.  

கேள்வி: தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பு மார்ச் 1ஆம் திகதி முதல் வழங்­கு­வ­தாக கூறப்­பட்­டது. ஆனால்   அமைச்சர் ரமேஷ் பத்­தி­ரன   கருத்து தெரி­விக்­கையில் இந்த விடயம் தொடர்பில் இறு­தித்­தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வில்லை என்­கிறார். ஆனால் அமைச்சர் தொண்­ட­மானோ ஏப்ரல் 10ஆம் திகதி முதல்   சம்­பளம்  வழங்­கப்­படும் என்­கிறார்.  இதன் உண்மைத் தன்மை என்ன?

பதில்:  இந்த விடயம் தொடர்பில்   நாம் பேசு­கின்றோம்.   1000 ரூபா வழங்­கு­வ­தாக  அவர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர். சித்­திரை முதல்  அதனை வழங்க  முடியும். 

கேள்வி: தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் என்ன நட­வ­டிக்கை எடுப்­பீர்கள்?

பதில்: அர­சியல் கைதிகள் என்று  யாரும் இருப்­ப­தாக  நான் கரு­த­வில்லை. 

கேள்வி:  ஜெனி­வாவில்   இலங்­கைக்கு பாத­க­மான நிலை  ஏற்­பட்­டுள்­ளது.  பல  நாடு­களும் அமைப்­புக்­களும்  தமது ஆதங்­கத்தை தெரி­வித்­துள்­ளன. இத்­த­கைய அச்­சு­றுத்­தலை அர­சாங்கம் எவ்­வாறு  சந்­திக்­கப்­போ­கின்­றது. 

பதில்: நாம் வெளி­நா­டு­க­ளுக்கு எமது  நிலைப்­பாட்டை தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளோம்.    ஐ.நா. மனித உரிமை பேர­வையில்  நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மா­னத்­தி­லி­ருந்து  வெளி­யே­று­வ­தற்கு மக்கள் ஆணை  வழங்­கி­யி­ருந்­தனர்.   இதற்­கி­ணங்­கவே நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. எமது நாட்டின் இறைமையை  நாம் விட்டுக்கொடுக்க முடியாது. இதனை வெளிநாடுகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம். எமது சுயாதீனத்தை பாதுகாக்கவேண்டியது அவசியமாகின்றது. 

கேள்வி:   பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கோத்தபாய  ஜனாதிபதி என்றும் தானே பிரதமர் என்றும் சஜித் பிரேமதாச கூறிவருகின்றார்.   சஜித்துடன் இணைந்து பணியாற்றவீர்களா?

பதில்:  நாம் தனிமனிதர்களை விட கொள்கையின் அடிப்படையிலே செயற்படவேண்டும். எமது கட்சிக்குள் கொள்கை இருக்கின்றது.  கடந்த அரசாங்க காலத்தின்போது   அவர்களது கொள்கைக்கு   மக்கள்   அனுமதி வழங்கவில்லை.  வடக்கு கிழக்கில்  கொள்கையின் அடிப்படையின் கீழ்   வாக்களிப்பு  இடம்பெறவில்லை.   இனவாதத்தை விதைத்த  வாக்குகள் அங்கு பெறப்பட்டன.   ஆனால் ஏனைய இடங்களில்  நாம்  மிகப்பெரிய வெற்றிபெற்றோம்.  நாட்டின் சுயாதிபத்தியம் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு   நாம் செயற்படவேண்டும்.  

கேள்வி: நீங்கள் ஜனாதிபதியான பின்னர் இராணுவ அதிகாரிகளை முக்கிய பதவிகளுக்கு  நியமிப்பதாக குற்றம்சாட்டப்படுகின்றது. 

பதில்: முன்னைய அரசாங்கம்   முன்னாள் இராணுவ அதிகாரிகளை பெருமளவில்  பதவிகளுக்கு நியமித்திருந்தது.   ஆனால் அன்று  இவ்வாறான கேள்வி  எழுப்பப்படவில்லை.    அலரிமாளிகைக்குள்ளே  பல ஜெனரல்கள்  பதவிக்கு அமர்த்தப்பட்டனர்.  இராணுவத்திலிருந்து   அதிகாரிகள்  விலகினால்  அவர்கள் சிவில்  பிரஜைகளாவர்.   இத்தகைய  இராணுவ அதிகாரிகளை  நியமிக்கும் நடைமுறைகள்  பல்வேறு  நாடுகளில் இடம்பெறுகின்றது. 

ஜெனரல் ஒருவரை நாம்   ஒருபதவிக்கு நியமித்தால் அவர் பல்வேறு பயிற்சிகளை பெற்றவராக இருப்பார்.    சர்வதேச ரீதியில் 20க்கும் மேற்பட்ட பயிற்சி நெறிகளில்  அவர் பங்கேற்றிருப்பார் அமெரிக்காவிலும்  இவ்வாறான நியமனங்கள்   வழங்கப்படுகின்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04