கொரோனாவினால் உலகளாவிய ரீதியில் இதுவரை 3,383 உயிரிழப்பு சம்பவங்கள்!

Published By: Vishnu

06 Mar, 2020 | 10:20 AM
image

கொரோனா வைரஸினால் நேற்றைய தினம் மாத்திரம் சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 30 ஆக அதிகரித்துள்ளதாக அந் நாட்டு தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.

இதனால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 3,042 ஆக உயர்வடைந்துள்ளது.

சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் வியாழக்கிழமை மாத்திரம் 143 பேர் கொரேனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 126 பேர் கொரோனாவின் பிரதான மையப் பகுதியான ஹூபேயில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் கொரோனா தொற்றினால் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கையானது தற்போது 80,552 ஆக பதிவாகியுள்ளது. 

அது மாத்திரமன்றி உலகளாவிய ரீதியிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 97,852 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் சி.என்.என். செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

சீனாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 53,726 பேர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் கூறியுள்ளது.

இதேவளை சீனாவுக்கு வெளியே இதுவரை 341 உயிரிழப்பு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. இதனால் உலகளாவிய ரீதியாக ஏற்பட்ட உயிரிழப்புகள் 3,383 ஆக காணப்படுகிறது.

சீனாவுக்கு வெளியே ஏற்பட்ட உயிரிழப்புகள்

  • இத்தாலி: 148 
  • ஈரான்: 107
  • தென்கொரியா: 42
  • ஜப்பான்: 12
  • அமெரிக்கா: 12
  • பிரான்ஸ்: 07
  • ஸ்பெய்ன்: 03
  • ஹொங்கொங்: 02
  • ஈராக்: 02
  • தாய்வான்: 01
  • அவுஸ்திரேலியா: 01
  • தாய்லாந்து: 01
  • பிலிப்பைன்ஸ்: 01
  • சுவிட்சர்லாந்து: 01
  • பிரிட்டன்: 01

Photo Credit :CNN

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47