வவுனியா தனியார் பஸ்ஸில் பயணிப்போர் பல அசௌகரியத்திற்குள்ளாவதாக பயணிகள் விசனம்

Published By: Daya

06 Mar, 2020 | 02:10 PM
image

வவுனியா தனியார் பஸ்ஸில் பயணிப்போர் பல அசௌகரியத்திற்குள்ளாவதாகப் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர். 

வாரிக்குட்டியூரிலிருந்து வவுனியா செல்லும் தனியார் பஸ் ஒன்றில் இரண்டு நடத்துனர்கள் அமர்த்தப்பட்டு பயணிகளுக்கு பெரும் அசௌகரியங்கள் ஏற்படுத்தப்படுவதுடன் மாணவர்களுக்கு போதிய பாதுகாப்புக்கள் இன்றி பஸ்ஸின் பிரதான வாயிலிருந்து பயணிக்கவேண்டிய நிலையும் அதிக சத்தத்துடன் சினிமாப்பாடல்கள் ஒலிபரப்புவதால் பயணிகளுக்கும், மாணவர்களுக்கும் பல அசௌகரியங்களுக்குட்படுத்தப்படுவதாகவும் அத்தோடு பயணிகளுக்கு தகாதவார்த்தை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பயணிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வாரிக்குட்டியூரிலிருந்து வவுனியா செல்லும் தனியார் பஸ் பாடசாலை மாணவர்களுக்கு போதிய பாதுகாப்புக்கள் இன்றி வாசலில் தொங்கி நின்றவாறு பயணிப்பதாகவும் இரு நடத்துனர்கள் ஒரு பஸ்ஸில் கடமை மேற்கொள்வதால் பயணிகளுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுகின்றன. 

வயதானவர்களிடம் தரக்குறைவான வார்த்தைப்பிரயோகம்  பாடசாலை செல்லும் மாணவர்கள் நோயாளர்கள், இளைஞர், யுவதிகள் எனப்பலரும் பயணம் மேற்கொள்ளும் பஸ்ஸில் சினிமாப் பாடல்களை அதிக சத்தத்துடன் ஒலிப்பரப்பி வருகின்றனர். நீண்ட நேரங்கள் காத்திருக்கவேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. 

வாரிக்குட்டியூரிலிருந்து 6.30 க்கு வவுனியா நோக்கி செல்லும் பஸ் வழமையான பாதையைப் பயணங்களை மேற்கொள்ளாமல் அதற்கப்பால் பல இடங்களைச் சுற்றி கால நேரத்திற்கு மாணவர்களைப் பாடசாலைக்கு அழைத்துச் செல்வதில்லை. இதனால் பலருக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுகின்றன.

இவ்வாறான பஸ் நடத்துனர்கள் மற்றும் சாரதிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு குறித்த பஸ்ஸில் பயணிக்கும் பயணிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50