ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்படுமா? - நீதிமன்ற தீர்ப்பு இன்று!

Published By: Vishnu

06 Mar, 2020 | 09:30 AM
image

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவத்தின் முன்னாள் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் உட்பட  12  சந்தேக நபர்களை கைதுசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பை வெளியிட உள்ளது.

கடந்த  2016 ஆம் ஆண்டு மார்ச் 29  ஆம் திகதி மற்றும் மார்ச்  31 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின் போது நிக்ழ்ந்ததாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால், கோட்டை நீதிவான் நீதிமன்றில் கடந்த புதன்கிழமை புதிய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டடிருந்தது.

இதன்போது சி.ஐ.டி.யின் கோரிக்கைக்கு அமைவாக நீதிவான் குறித்த 12 பேருக்கும் எதிராக வெளிநாட்டுப் பயணத் தடை விதித்தார்.

இதேவளை 12  சந்தேக நபர்கள் தொடர்பில் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்து, சந்தேக நபர்களாக அவர்களை பெயரிட்டு, பிடியாணையினைப் பெற்றுக்கொண்டு கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு அன்றைய தினம் ஆலோசனை வழங்கியிருந்தார்.

இந் நிலையிலேயே அவர்களை கைதுசெய்வதற்கான நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பை வெளியிட உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15