இன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - மார்ச் 06

06 Mar, 2020 | 08:58 AM
image

இன்றைய நாள் நிகழ்வுகள்:

632 – முகம்மது நபி தமது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார்.

845 – இஸ்லாமைத் தழுவ மறுத்த 42 பைசாந்திய அரசு அதிகாரிகள் ஈராக்கின் சாமரா நகரில் தூக்கிலிடப்பட்டனர்.

1079 – ஓமர் கய்யாம் ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார்.

1204 – சாட்டோ கைலார்டு சமரில் இங்கிலாந்தின் ஜான் மன்னர் நார்மாண்டி மீதான தனது ஆதிக்கத்தை பிரெஞ்சு மன்னர் இரண்டாம் பிலிப்பிடம் இழந்தார்.

1447 – ஐந்தாம் நிக்கலஸ் திருத்தந்தை ஆனார்.

1479 – கனரித் தீவுகளை போர்த்துக்கல் காஸ்டில் பேரரசுக்கு வழங்கியது.

1521 – பேர்டினண்ட் மகலன் குவாம் தீவை அடைந்தார்.

1665 – பிரித்தானிய அரச கழகத்தின் அரச கழகத்தின் மெய்யியல் இதழின் முதல் இதழ் வெளியிடப்பட்டது.

1788 – கைதிகளைக் குடியமர்த்தும் திட்டத்தில் முதற்படியாக முதலாவது தொகுதி பிரித்தானியக் கைதிகள் அடங்கிய கப்பல் நோர்போக் தீவை அடைந்தது.

1790 – மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1820 – மிசூரி அமெரிக்காவின் அடிமை மாநிலமாக இணைந்தது.

1836 – அலாமா போர்: டெக்சாசில் அலாமா நகரை மெக்சிக்கோ படைகள் தாக்கிக் கைப்பற்றினர்.

1866 – இலங்கையில் கண்டி மாநகரசபைக்கான முதலாவது தேர்தல் இடம்பெற்றது.[1]

1869 – திமீத்ரி மென்டெலீவ் தனது முதலாவது தனிம அட்டவணையை உருசிய வேதியியல் கழகத்தில் சமர்ப்பித்தார்.

1882 – சேர்பிய இராச்சியம் மீண்டும் நிறுவப்பட்டது.

1899 – ஜேர்மனியின் பேயர் நிறுவனம் "ஆஸ்பிரினை" வணிகச் சின்னமாகப் பதிந்தது.

1902 – ரியல் மாட்ரிட் கால்பந்துக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

1912 – இத்தாலிய-துருக்கிப் போர்: முதல் தடவையாக வான்கப்பல்களை போர் ஒன்றில் இத்தாலியப் படைகள் பயன்படுத்தின.

1933 – பெரும் பொருளியல் வீழ்ச்சி: அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் அனைத்து வங்கிகளையும் மூடி வங்கி விடுமுறையாக அறிவித்தார்.

1940 – பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் தற்காலிகப் போர் ஓய்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.

1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் வான்படைகள் ஜேர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்ட நர்வா என்ற எசுத்தோனிய நகரைக் குண்டுகளால் தாக்கி, வரலாற்றுப் புகழ் மிக்க அந்நகரை அழித்தன.

1945 – இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியின் கோல்ன் நகரம் அமெரிக்கப் படைகளினால் கைப்பற்றப்பட்டது.

1946 – வியட்நாம் போர்: ஹோ சி மின் பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி பிரான்சு வியட்நாமை பிரெஞ்சு ஒன்றியம் மற்றும் இந்தோ-சீனக் கூட்டமைப்பினுள் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பகுதியாக ஏற்றுக் கொண்டது.

1953 – ஸ்டாலினின் மறைவையடுத்து சோவியத்தின் பிரதமராகவும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை செயலாளராகவும் கியோர்கி மாலென்கோவ் பதவியேற்றார்.

1957 – ஐக்கிய இராச்சியக் குடியேற்ற நாடுகளான கோல்ட் கோஸ்ட் மற்றும் பிரித்தானிய தோகோலாந்து ஆகியன இணைந்து கானா குடியரசு என்ற பெயரில் விடுதலை பெற்றன.

1964 – கிரேக்கத்தின் மன்னராக இரண்டாம் கான்சுடன்டைன் பதவியேற்றார்.

1964 – அமெரிக்காவின் இஸ்லாம் தேசம் அமைப்பின் தலைவர் எலிஜா முகம்மது குத்துச்சண்டை வீரர் காசியஸ் கிளேயின் பெயரை முகம்மது அலி என மாற்றினார்.

1967 – திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.

1967 – பனிப்போர்: யோசப் ஸ்டாலினின் மகள் சுவெத்லானா அலிலுயேவா ஐக்கிய அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றார்.

1975 – ஈரானும் ஈராக்கும் தமது எல்லை தொடர்பாக உடன்பாட்டிற்கு வந்தன.

1987 – பிரித்தானியப் பயணிகள் கப்பல் எரால்டு ஒஃப் பிரீ என்டர்பிரைசசு 90 செக்கன்களில் மூழ்கியதில் 193 பேர் உயிரிழந்தனர்.

1988 – மூன்று ஐரியக் குடியரசுப் படை வீரர்கள் ஜிப்ரால்ட்டரில் சிறப்பு வான்சேவையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2003 – அல்ஜீரியாவில் வானூர்தி ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 103 பேரில் 102 பேர் உயிரிழந்தனர்.[2]

2007 – இந்தோனேஷியாவின் சுமாத்ராவில் இடம்பெற்ற இரண்டு அடுத்தடுத்த நிலநடுக்கங்களில் 70 பேர் வரையில் உயிரிழந்தனர்.

2008 – பக்தாதில் நிகழ்ந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

இன்றைய நாள் பிறப்புகள்:

1475 – மைக்கலாஞ்சலோ, இத்தாலிய ஓவியர், சிற்பி (இ. 1564)

1508 – நசிருதீன் உமாயூன், 2-வது முகலாயப் பேரரசர் (இ. 1556)

1697 – ஸ்ட்ரிங்கர் லாரன்சு, பிரித்தானிய இந்தியாவின் முதற் பெரும் படைத்தலைவர் (இ. 1775)

1806 – எலிசபெத் பிரௌனிங், ஆங்கிலேய-இத்தாலியக் கவிஞர் (இ. 1861)

1926 – ஆலன் கிரீன்சுபன், அமெரிக்கப் பொருளியல் அறிஞர்

1927 – கபிரியேல் கார்சியா மார்க்கேஸ், நோபல் பரிசு பெற்ற கொலம்பிய எழுத்தாளர் (இ. 2014)

1935 – அன்புமணி, ஈழத்து எழுத்தாளர் (இ. 2014)

1937 – சற்சொரூபவதி நாதன், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர்

1937 – வலண்டீனா தெரெசுக்கோவா, உருசிய விண்வெளி வீராங்கனை

1938 – சி. வி. விசுவேசுவரா, இந்திய வானியலாளர் (இ. 2017)

1948 – இசுடீபன் சுவார்ட்சு, அமெரிக்க இசையமைப்பாளர்

1953 – மாதவ் குமார் நேபாள், நேப்பாளத்தின் 34வது பிரதமர்

1953 – கரோலின் பொற்கோ, அமெரிக்க வானியலாளர்

1954 – ம. சா. அறிவுடைநம்பி, தமிழறிஞர், கல்வியாளர் (இ. 2014)

1972 – கரு பழனியப்பன், தமிழகத் திரைப்பட இயக்குநர்

இன்றைய நாள் இறப்புகள்:

1866 – வில்லியம் ஹியூவெல், ஆங்கிலேய வரலாற்றாளர், மெய்யியலாளர் (பி. 1794)

1900 – காட்லீப் டைம்லர், செருமானியத் தொழிலதிபர், பொறியியலாளர் (பி. 1834)

1939 – லிண்டெமன், செருமானியக் கணிதவியலாளர் (பி. 1852)

1973 – பெர்ல் பக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1892)

1982 – அய்ன் ரேண்ட், உருசிய-அமெரிக்க எக்ழுத்தாளர், மெய்யியலாளர் (பி. 1905)

1986 – ஜோர்ஜியா ஓ'கீஃப், அமெரிக்க ஓவியர் (பி. 1887)

2000 – எஸ். ஆறுமுகம், ஈழத்துப் பொறியியலாளர், எழுத்தாளர் (பி. 1905)

2002 – சி. ஜேஸ்தாசன், தமிழக இலக்கிய வரலாற்றாசிரியர் (பி. 1919)

2005 – அன்ஸ் பேத்து, நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1906)

2008 – கி. சிவநேசன், இலங்கை அரசியல்வாதி (பி. 1957)

2009 – சோ. அழகர்சாமி, தமிழக அரசியல்வாதி (பி. 1926)

2015 – ராம் சுந்தர் தாஸ், பீகாரின் 18-வது முதலமைச்சர் (பி. 1921)

2015 – கிஷோர், தமிழ்த் திரைப்படத் தொகுப்பாளர் (பி. 1978)

2016 – நான்சி ரேகன், அமெரிக்க நடிகை, அமெரிக்காவின் 42வது முதல் பெண்மணி (பி. 1921)

2016 – கலாபவன் மணி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர், பாடகர் (பி. 1971)

2019 – டைப்பிஸ்ட் கோபு, தமிழக நாடக, திரைப்பட நடிகர்

இன்றைய சிறப்பு நாள்:

நிறுவன நாள் (நோர்போக் தீவு, 1788).

விடுதலை நாள் (கானா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1957)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24