வேலையற்ற பட்டதாரிகளை அரசாங்கம் ஏமாற்றி இருக்கின்றது : சஜித்

Published By: R. Kalaichelvan

05 Mar, 2020 | 06:31 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

வேலையற்ற பட்டதாரிகளை அரசாங்கம் ஏமாற்றி இருக்கின்றது. நியமனம் வழங்குவதை தேர்தல்கள் ஆணையாளர் இடைநிறுத்துவார் என தெரிந்தே அரசாங்கம் பாராளுமன்றம் கலைப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் நியமனக்கடிதங்களை அனுப்பிருந்தது. அரசாங்கம் வாக்குறுதியளித்த காலத்துக்குள் நியமனம் வழங்கியிருந்தால் தேர்தல் ஆணையாளர் இடைநிறுத்தியிருக்கமாட்டார்.

அத்துடன் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆட்சியமைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டால் அனைத்து பட்டதாரிகளையும் 3மாதத்துக்குள் அரசதுறையில் நிரந்தர நியமனம் வழங்குவேன் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிமின் இல்லத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஆட்சியமைத்து ஒரு மாதத்திற்குள் வேலையற்ற பட்டதாரிகளை அரச துறையில் உள்வாங்கி, 3மாதத்துக்குள் நிரந்தர நியமனம் வழங்குவேன் என ஜனாதிபதி தேர்தலின்போது நான் வாக்குறுதியளித்திருந்தேன்.

 ஆனால் எனது எதிர்வாதி, பட்டதாரிகளை ஒருமாதத்துக்குள் இணைத்துக்கொள்வதாக வாக்குறுதியளித்தார். ஜனவரியில் நியமனம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் பெப்ரவரியில் வழங்குவதாக தெரிவித்தனர். இறுதியில் பாராளுமன்றம் கலைப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட சிலருக்கு அவசரமாக நியமனக்கடிதங்களை தபாலில் அனுப்பியிருக்கின்றது.

மேலும் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நியமனங்கள் வழங்குவது, இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது தேர்தல் சட்டத்துக்கு முரணாகும். அதனடிப்படையிலே பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதங்கள் வழங்குவதை தேர்தல்கள் ஆணைகுழுவின் தலைவர் இடை நிறுத்தி இருக்கின்றார்.

அத்துடன் பாராளுமன்றம் கலைக்கப்படும் திகதியை அரசாங்கம் ஏற்கனவே அறிந்திருந்தது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் நியமனம் வழங்குவதை தேர்தல்கள் ஆணையாளர் இடைநிறுத்துவார் என தெரிந்துகொண்டே அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் அரசாங்கம் 44ஆயிரம் பட்டதாரிகளையும் ஏமாற்றி இருக்கின்றது.

அத்துடன் பட்டதாரிகளுக்கான நியமனத்தை இடைநிறுத்த நானே செயற்பட்டதாக அரசாங்கம் பொய் பிரசாரம் ஒன்றை மேற்கொண்டுவருகின்றது என அவர் தெரிவித்தமை குறிப்பிபடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47