புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வழங்கியுள்ள காலவகாசத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் -  வஜிர அபேவர்தன

Published By: Digital Desk 4

05 Mar, 2020 | 04:37 PM
image

(செ.தேன்மொழி)

முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு , ஐக்கிய தேசியக் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டு பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு  வாய்ப்பளித்திருப்பதாக கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிரஅபேவர்தன தெரிவித்தள்ளார்..

ஐ.தே.விலிருந்து பிரிந்து சென்றவர்கள் வெற்றியடைந்துள்ளதற்கான சான்றுகள் இல்லை என்றும், இதனால் சஜித் தரப்பினர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைசாத்திடுவார்கள் என்று தாம் எதிர்பார்பதாகவும் கூறினார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் அனுகுமுறைகளையும் , நடவடிக்கைகளையும் பின்பற்றி செயற்பட்டிருந்தால் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டிறாது என்றும் , அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டாலே வெற்றியடைய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து வேட்புமனு தாக்கல் திகதியும் ,  தேர்தல் திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.இந்நிலையில் பொதுக் கூட்டணி அமைப்பது தொடர்பில் கட்சிக்குள் கலந்துரையாடப்பட்டிருந்தது. 

அதற்கமைய சஜித் பிரேமதாசவின் தலைமையில் பொதுக் கூட்டணி அமைப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தபோதிலும் , அது கூட்டணியாக இல்லாமல் தனித்த கட்சியாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அனுமதி பெற்றுள்ள கட்சி ஒன்றுக்கு புதிதாக தலைவர் மற்றும் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐ.தே.க. உறுப்பினர்களும் யானை சின்னத்தில் போட்டியிடுவதையே விரும்புகின்றனர்.தற்போது சஜித் தலைமையிலான தரப்பினர் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். இவர்கள் அவ்வாறு தனித்து போட்டியிடுவார்கள் என்று நான் எண்ணவில்லை. இதேவேளை தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு சஜித் தரப்பினருக்கு தற்போது சந்தர்ப்பம் வழங்கியுள்ளார். 

இதனை கருத்திற் கொண்டு அவர்கள் செயற்படுவார்கள் என்று நான் கருதுகின்றேன். இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்துச் சென்று தனிக்கட்சி அமைத்து செயற்பட முயற்சித்தவர்கள் கடந்தகாலங்களில் வெற்றியடைந்தமைக்கான சான்றுகள் இல்லை. தற்போது பிரிந்துச் செல்ல முயற்சிப்பவர்கள் இந்த விடயம் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08