'நமஸ்தே' சொல்வதை ஊக்குவிக்கும் இஸ்ரேல் பிரதமர் - காரணம் என்ன ?

05 Mar, 2020 | 05:24 PM
image

உலகெங்கும் பரவிவரும் ஆட்கொல்லி நோயான கொவிட் 19 என்ற கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க  இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியர்களின் 'நமஸ்தே' (வணக்கம்) சொல்லும்  வழியை பின்பற்ற ஊக்குவித்துள்ளார்.

ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குடிமக்களைக் கைகுலுப்பதைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டார்.

மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியர்களின் 'நமஸ்தே' முறையை பின்பற்ற ஊக்குவித்துள்ளார்.

மக்களை வாழ்த்தும்போது இந்தியர்கள் எவ்வாறு 'நமஸ்தே' செய்கிறார்கள் என்பதையும் நெதன்யாகு செய்து காட்டினார்.

மேலும் நமஸ்தே செய்யும் முறையையும் செய்து காட்டியுள்ளார்.

மக்களை வாழ்த்தும்போது இந்தியர்கள் 'நமஸ்தே' செய்வது எப்படி என்பதையும் அவர் செய்தியாளர் கூட்டத்தில் விளக்கியுள்ளார்.

"நாங்கள் ஒரு உலகளாவிய தொற்றுநோய்க்கு நடுவில் இருக்கிறோம்" என்று நெதன்யாகு தெரிவித்துள்ளதுடன் தொற்று நோய் பரவுவதைத் தடுக்க விரைவாக நடவடிக்கை எடுப்பதால் இஸ்ரேல் சிறப்பாக செயல்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் இதுவரை 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதோடு இறப்புகள் ஏதும்  இடம்பெறவில்லை. 7000 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இஸ்ரேல் சுகாதார அமைச்சர் மக்கள் கூட்டங்களுக்கு தடை விதித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் இதுவரை 3,200 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right