பாடசாலைக்குச் சென்று காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட  சிறுமி சடலமாக  மீட்கப்பட்ட சம்பவம் மஹியங்கனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மொரான யல்வெல பகுதியைச் சேர்ந்த மஹியங்கனை குடாலுனுக கனிஷ்ட பாடசாலையில் நான்காம் தரத்தில் கல்வி கற்கும் 9 வயதுடைய பாடசாலை மாணவியான மாலினி சந்தமாலி என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமி பாடசாலைக்கு சென்று வீடு திரும்பாத நிலையில் சிறுமியின் பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து தேடிய போது, சிறுமி குடாலுனுக பனுல்ல காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.