வேட்­பா­ளர்­களை உயர்­மட்­டக்­குழு கலந்­து­ரை­யாடி தீர்­மா­னிக்கும்: திகாம்­பரம்

Published By: J.G.Stephan

05 Mar, 2020 | 03:24 PM
image

பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள் தொடர்­பாக தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் உயர்­மட்டக் குழு விரைவில் கலந்­து­ரை­யாடி இறுதி தீர்­மா­னத்தை எடுக்­க­வுள்­ள­தாக அதன் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பி. திகாம்­பரம் தெரி­வித்தார்.

நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் மலை­யக மக்கள் முன்­னணி சார்பில் அதன் தலைவர் வீ. இரா­தா­கி­ருஸ்ணன் போட்­டி­யி­டு­வது உறு­தி­யா­கி­யுள்ள நிலையில் தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் சார்பில் போட்­டி­யிடும் இரண்டு வேட்­பா­ளர்கள் சம்­பந்­த­மான விப­ரத்தைக் அறி­விக்­கு­மாறு   கேட்­ட­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

   தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் சார்பில் கடந்த தேர்­தலில் நானும் தில­க­ரா­ஜாவும் போட்­டி­யிட்டோம். மலை­யக மக்கள் முன்­னணி சார்பில் இரா­தா­கி­ருஸ்ணன் போட்­டி­யிட்டார். நாங்கள் மூவ­ருமே வெற்றி பெற்­றி­ருந்தோம். அதைப்போலவே இம்­மு­றையும் மூன்று வேட்­பா­ளர்­களை கள­மி­றக்கத் தீர்­மா­னித்­துள்ளோம்.

இம்­முறை எமது சங்­கத்தின் பிரதித் தலை­வரும் மத்­திய மாகாண சபை முன்னாள் உறுப்­பி­ன­ரு­மான எம். உத­ய­குமார்  போட்­டி­யிட விருப்பம் தெரி­வித்­துள்ளார். அவரின் வேண்­டுகோள் நியா­ய­மா­ன­தா­கவும் அமைந்­துள்­ளது.  அதே­நேரம், தொழி­லாளர் தேசிய முன்­னணி பொதுச் செய­லா­ளரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம். தில­க­ரா­ஜாவும் மீண்டும் பாரா­ளு­மன்­றத்­துக்குத் தெரி­வாக வேண்டும். அவர் கடந்த காலங்­களில் எமது மக்கள் தொடர்­பாக பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் பாரா­ளு­மன்­றத்தில் குரல்­கொ­டுத்து வந்­துள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில் தேசியப் பட்­டியல் உறுப்­பி­னரைப் பெற்றுக்கொள்­வது தொடர்­பாக பேச்­சு­வார்த்தை இடம்­பெற்று வரு­கின்­றது. எனவே, நான் தேசியப் பட்­டி­யலில் இடம்­பெற்று ஏனைய இரண்டு பேரையும் போட்­டி­யிட வைப்­பதா அல்­லது தில­கராஜ் மற்றும் உதயா ஆகிய இரு­வரில் ஒரு­வரை தேசியப் பட்­டி­ய­லுக்கு உள்­வாங்கிக் கொண்டு மற்ற இரு­வ­ரையும் போட்­டி­யிட வைப்­பதா என்று இன்­னமும் முடிவு செய்­யப்­ப­ட­வில்லை.

இது சம்­பந்­த­மாக தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் உயர்­மட்டக் குழு விரைவில் கூடி கலந்­து­ரை­யா­டலை மேற்­கொண்டு தீர்க்­க­மான முடிவை எடுப்­ப­தற்குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அதற்­க­மைய, தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பாளர் பற்­றிய இறுதி முடிவு மேற்­கொள்­ளப்­படும்.

அநே­க­மாக அடுத்த வார­ம­ளவில் எமது உயர்­மட்டக் குழுவின் கூட்­டத்தை கூட்­டு­வ­தற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. அதில் வேட்­பாளர் தெரிவு உட்­பட தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கைகள் அதற்­கான குழு அமைத்தல் உட்­பட இன்னும் பல முக்­கிய விட­யங்கள் பற்றி பேசவுள்ளோம். இறுதி முடிவு எட்டப்பட்டவுடன் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். எனவே, அதுவரை யூகங்களின் அடிப்படையில் செய்திகளை வெளியிட்டு குழப்பகரமான நிலையை ஏற்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு  ஊடகங்களை கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04