தோட்ட கம்பனிகள் - அரசாங்கத்திற்கிடையேயான ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்து ; ஏப்ரல் முதல் ஆயிரம் ரூபா - அரசாங்கம்

Published By: Vishnu

05 Mar, 2020 | 03:18 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தோட்ட கம்பனிகளுக்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான   ஒப்பந்தம் அடுத்தவாரம் கைத்திடப்பட்டு ஏப்ரல் மாதம் ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர்  ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

பெருமளவிலான பெருந்தோட்டங்கள் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ளன. இதனால் அரசாங்கத்தினால் தற்துணிவுடன் எவ்வித தீர்மானங்களையும் முன்னெடுக்க முடியாது. அதனால்  தோட்ட  கம்பனிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம்.   

ஆயிரம் வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தினால் கம்பனிகளுக்கு ஏற்படும் நிதி நெருக்கடி தொடர்பில்  தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் அவர்கள் தரப்பு நியாயத்தை  எடுத்துரைத்தார்கள்.

மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க வேண்டும் என்ற காரணத்திற்காக தேயிலை தொழிற்துறையின் உற்பத்திசார் வரிகளை குறைப்பதற்கும், கம்பளிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்தது. ஆனால்  தோட்ட கம்பனிகள் இதுவரையில் மலையக தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம்  வழங்கஎவ்வித இணக்கத்தினையும் தெரிவிக்கவில்லை.

அரசாங்கம் குறிப்பிட்டதை போன்று  மார்ச் முதலாம் திகதியில் இருந்து மலையக தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க முடியவில்லை. இவ்விடயம் தொடர்பில் தோட்ட கம்பனிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை இடம்பெற்றது. 

அப்போதும் அவர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. ஆகவே தோட்ட  கம்பனிகளுக்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்று அடுத்தவாரம் செய்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏப்ரல் மாதத்தில் இருந்து  ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசாங்க  தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற    அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56